
இந்தியா அபாரம்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையில் நேற்று நடந்து முடிந்துள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கடந்த பகலிரவு போட்டியின் தோல்விக்கு ஆஸ்திரேலியாவை பழிவாங்கியது. இந்த வெற்றி அனைத்து தரப்பினரின் பாராட்டுக்கும் உள்ளாகியுள்ளது.

சுனில் கவாஸ்கர் மகிழ்ச்சி
ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங், ரஹானே சிறப்பான கேப்டனாக விளையாடுவதாகவும் தன்னுடைய அணியை முன்னிலைப் படுத்துவதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஆஸ்திரேலிய ஜாம்பவான்கள் ரிக்கி பாண்டிங், ஆடம் கில்கிறிஸ்ட், மைக் ஹஸ்ஸே, வார்னே ஆகியோர் ரஹானேவின் கேப்டன்ஷிப் குறித்து பாராட்டு தெரிவித்துள்ளதாக முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ரஹானேவிற்கு பாராட்டு
ரிக்கி பாண்டிங் உள்ளிட்டவர்கள் கமெண்டரி பாக்சில் இருந்து அஜிங்க்யா ரஹானேவின் கேப்டன்ஷிப்பை பாராட்டுவது மன மகிழ்ச்சியை அளிப்பதாக சுனில் கவாஸ்கர் மேலும் தெரிவித்துள்ளார். ரஹானே தற்காலிக கேப்டனாக இருந்தாலும் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து செயல்படுவதாகவும், ஆனால் அந்த அணிக்கான நிஜமான கேப்டன் திரும்பி வரும்போது அவருக்கான வழியை விட்டுக் கொடுக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

நடைமுறையை மாற்றிய இந்தியா
ஒவ்வொரு முறையும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை வெற்றி கொள்ளும் ஆஸ்திரேலிய அணி, தொடர்ந்து தொடரையும் வெற்றி கொள்வதே நடைமுறை என்றும். ஆனால் தற்போதைய இந்திய அணியின் வெற்றி ஆஸ்திரேலியாவிற்கு மிகுந்த நெருக்கடியை அளித்துள்ளதாகவும் கவாஸ்கர் மேலும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications