எங்க ஆட்கள் பேட்டிங்கை நினைத்தால் பயந்து வருது: முன்னாள் பாக். வீரர் சோயப் அக்தர்
அடிலெய்ட்: உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணி தொடர்ந்து சிறப்பாக பேட் செய்யாமல் இருப்பதை நினைத்து கவலையாக உள்ளது என்று அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் தான் ஆடிய 5 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான், அயர்லாந்து அணிகள் மோதும் ஆட்டம் ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் நாளை நடைபெற உள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணி பற்றி அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தர் கூறுகையில்,

பேட்டிங்
எனக்கு பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை பற்றி கவலையே இல்லை. ஆனால் அவர்களின் பேட்டிங்கை அதிலும் அவர்கள் சேஸ் செய்வதை நினைத்தால் தான் கவலையாக உள்ளது.

பாகிஸ்தான்
நாளை டாஸ் வென்றால் பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்து அதிக ரன்கள் எடுக்க வேண்டும். அப்போது அதை சேஸ் செய்ய அயர்லாந்துக்கு கடினமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார் அக்தர்.

பயிற்சியாளர்
எங்கள் அணியின் சிறப்பான ஆட்டம் இனி தான் வெளிப்படும் என்று நம்புகிறேன். இல்லை என்றால் உலகக் கோப்பை தொடரில் நிலைத்து நிற்பது கடினம் என்று பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர் தெரிவித்துள்ளார்.

அயர்லாந்து
2007ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியில் அயர்லாந்துடன் மோதிய பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. தற்போதும் அது போன்று நடக்காமல் இருக்க வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது பாகிஸ்தான்.


Click it and Unblock the Notifications