Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடேய்!! மேட்ச் பிக்ஸிங் பண்ணுங்க.. ஆனா இப்படி மொக்கையா பண்ணி கடுப்பேத்தாதீங்க!!

ஹைதராபாத்: உள்ளூர் கிரிக்கெட் தொடரில் ஒரு போட்டியில் மேட்ச் பிக்ஸிங் போன்ற ஒரு சிரிக்க வைக்கும் செயல் நடைபெற்றுள்ளது.

சேஸிங் செய்த அணியை வெற்றி பெற வைக்க கடைசி பந்தில் பந்துவீச்சாளர் செய்த செயல் இணையத்தில் பரவி பயங்கர வைரல் ஆகி வருகிறது.

75 ரன்கள் அடித்த அணி

75 ரன்கள் அடித்த அணி

ஆதர்ஷ் கிரிக்கெட் கிளப் 2019 என்ற கிரிக்கெட் தொடரில் தேசாய் அணியும், ஜுனி டோம்பிவிலி அணியும் மோதின. முதலில் ஆடிய ஜுனி டோம்பிவிலி அணி 75 ரன்கள் எடுத்தது. அடுத்து தேசாய் அணி பேட்டிங் ஆட வந்தது.

6 ரன்கள் எடுத்தால் வெற்றி

6 ரன்கள் எடுத்தால் வெற்றி

5 ஓவர் மட்டுமே கொண்ட இந்த போட்டியில் 4.5 ஓவர் முடிவில் தேசாய் அணி 70 ரன்கள் எடுத்து இருந்தது. கடைசி பந்தில் 6 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில், பந்துவீச்சாளர் பந்து வீச தயாரானார்.

6 வைடுகள்

அவர் வீசிய பந்து வைடு ஆகச் சென்றது. அடுத்து வீசினார். அதுவும் வைடு. இப்படியே 6 வைடுகளை வீசி எதிரணியை வெற்றி பெற வைத்தார். கடைசியில் ஒரு பந்து மீதம் இருந்த நிலையில் தேசாய் அணி வெற்றி பெற்றது.

இது மேட்ச் பிக்ஸிங்

இது மேட்ச் பிக்ஸிங்

இந்த காமெடி இடம் பெற்ற வீடியோ காட்சி ட்விட்டரில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது. இதை பார்த்த பலரும் இது மேட்ச் பிக்ஸிங் தான் என கூறி வருகின்றனர்.

ஆறு முறை எப்படி?

ஆறு முறை எப்படி?

ஐந்து பந்துகள் சரியாக வீசிய அந்த பந்துவீச்சாளர் கடைசி பந்துக்கு மட்டும் திணறுவாரா? அதுவும் ஆறு முறை எப்படி தொடர்ந்து வைடு வீசுவார்? என சிலர் கேட்கிறார்கள். சிலர் பந்துவீச்சாளரை அடித்து மருத்துவமனையில் போட்டு இருப்பார்கள் என கூறியுள்ளார்கள்.

உண்மையா? இல்லையா?

உண்மையா? இல்லையா?

ஒருவர் தேசாய் அணி 500 ரூபாய் கொடுத்து மேட்ச் பிக்ஸிங் செய்துள்ளது என கூறி கிண்டல் செய்துள்ளார். உண்மையாகவே வைடு வீசினாரா? இல்லை மேட்ச் பிக்ஸிங்கா? நீங்களே சொல்லுங்க மக்களே!

Story first published: Wednesday, January 9, 2019, 18:17 [IST]
Other articles published on Jan 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+