Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்டீவ் ஸ்மித், ஏபி டீ வில்லியர்சுக்கு பௌலிங் போடுவது மிகப்பெரிய சவால்.. குல்தீப் யாதவ்

டெல்லி : ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டீ வில்லியர்சுக்கு பந்து வீசுவது மிகப்பெரிய சவால் என்று லெக் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Ganguly Changed Indian Cricket Part 3 | Ganguly made Dravid as Wicket-keeper

கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் தான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தாவிட்டாலும் சிறப்பாக பந்து வீசியதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் கேப்டன் தோனியின் கேப்டன்ஷிப்பில் தன்னால் தன்னம்பிக்கையுடன் பௌலிங் செய்ய முடிந்ததாகவும், பல்வேறு விஷயங்களில் அவர் உதவுவார் என்றும் குல்தீப் மேலும் கூறியுள்ளார்.

வாய்ப்புக்காக காத்திருப்பு

வாய்ப்புக்காக காத்திருப்பு

இந்திய அணியின் லெக் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் கடந்த ஆண்டில் சிறப்பான பௌலிங்கை மேற்கொள்ளவில்லை. உலக கோப்பையிலும் பங்கேற்று விளையாடிய குல்தீப் யாதவ் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தாததால் ரசிகர்கள் மற்றும் நிர்வாகத்தின் அதிருப்திக்கு உள்ளானார். இதனால் அணியில் இவரது வாய்ப்பு வருவதும் போவதுமாக உள்ளது.

தன்னம்பிக்கை அதிகரிக்கும்

தன்னம்பிக்கை அதிகரிக்கும்

இந்நிலையில் தொடர்ந்த வாய்ப்புகளால் மட்டுமே தன்னம்பிக்கையுடன் விளையாட முடியும் என்று குல்தீப் தெரிவித்துள்ளார். அவ்வாறு இல்லாமல் அரிதாக வாய்ப்புகள் வழங்கப்பட்டால், அதில் திறமையை கண்டிப்பாக வெளிப்படுத்த வேண்டுமே என்ற நெருக்கடி தான் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் ஏற்படும் மனநெருக்கடியால்தான் தன்னால் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்த முடிவதில்லை என்றும் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

பௌலிங் போடுவது கடினம்

பௌலிங் போடுவது கடினம்

கிரிக்கெட்பாசி நிகழ்ச்சிக்காக பேசிய குல்தீப் யாதவ், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டீ வில்லியர்சுக்கு பந்து வீசுவது மிகப்பெரிய சவால் என்று தெரிவித்துள்ளார். ஸ்மித் மெதுவாக பந்துகளை எதிர்கொள்வதால், அவருக்கு பந்து வீசுவது கடினம் என்றும் ஏபி டீ வில்லியர்ஸ் தனக்கான பிரத்யேகமான ஸ்டைலை பின்பற்றுவதால் அவருக்கும் பந்து வீசுவது கடினம் என்றும் யாதவ் தெரிவித்துள்ளார். நல்லவேளை வில்லியர்ஸ் ஓய்வு பெற்றுவிட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தன்னம்பிக்கை அதிகரித்திருந்தது

தன்னம்பிக்கை அதிகரித்திருந்தது

சக வீரர் யுஸ்வேந்திர சஹல் தன்னுடைய மிகச்சிறந்த நண்பர் என்று குறிப்பிட்டுள்ள குல்தீப் யாதவ், அணியில் தோனியை தான் மிகவும் மிஸ் செய்வதாகவும் தெரிவித்துள்ளார். தோனி இருக்கும்போது பீல்டிங்கிற்கான அனைத்து பணிகளையும் அவரே பார்த்துக் கொள்வார் என்றும் கீப்பிங்கையும் சிறப்பாக மேற்கொள்வார் என்றும் கூறியுள்ள யாதவ், இதனால் தன்னுடைய தன்னம்பிக்கை அதிகரித்து இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, July 3, 2020, 20:13 [IST]
Other articles published on Jul 3, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+