
அரையிறுதிப்போட்டி
நியூசிலாந்து அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில் கேப்டன் கேன் வில்லியம்சன் 46 ரன்களும், டேரில் மிட்செல் 53 ரன்களையும் எடுத்து உதவினர். ஆனால் பாகிஸ்தானின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் கடைசி வரை அதிரடி மட்டும் காட்டவே முடியவில்லை. சிட்னி மைதானத்தில் 150+ ரன்கள் என்பதே கடினமான இலக்கு தான் என கருதிய போது, அதிலும் ஆச்சரியம் தந்தது பாகிஸ்தான் அணி.

ஷாக் தந்த பாகிஸ்தான்
அந்த அணியின் ஓப்பனிங் ஜோடியான கேப்டன் பாபர் அசாம் - முகமது ரிஸ்வான் ஆகியோர் மீண்டும் தங்களது ஃபார்முக்கு திரும்பினர். சிறப்பாக விளையாடிய பாபர் அசாம் 42 பந்துகளில் 53 ரன்களும், முகமது ரிஸ்வான் 43 பந்துகளில் 57 ரன்களையும் குவித்தனர். இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டிற்கே 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததால், பின்னர் வந்த வீரர்களுக்கு சுலபமானது. இதனால் 19.1 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி கண்டது.

வில்லியம்சன் சோகம்
இந்நிலையில் இந்த தோல்வி குறித்து நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் வேதனையடைந்துள்ளார். அதில், ஆட்டத்தின் தொடக்கத்திலேயே பாகிஸ்தான் பவுலர்கள் எங்களுக்கு அழுத்தத்தை கொடுத்தனர். எனினும் மிடில் ஓவர்களில் டேரில் மிட்செலின் அதிரடியால் கம்பேக் கொடுத்தோம். இங்கு இந்த ஸ்கோரே போதுமானதாக இருக்கும் என கணித்தோம். ஏனென்றால் இது ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பிட்ச் ஆகும். மிகவும் கடினமாக இருந்ததால் ரன்களே வரவில்லை. ஆனால் எங்கள் கணிப்பு தவறாகிவிட்டது.

தாங்க முடியவில்லை
பாகிஸ்தான் அணியை இவ்வளவு சுலபமாக வெற்றிக்கு அருகே செல்லவிட்டது தான் என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. சற்று சிரமப்பட வைத்திருக்கலாம். எனினும் அவர்கள் அந்த அளவிற்கு சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எங்கள் அணியில் சில துறைகளில் தவறுகள் இருந்தன. எனவே இந்த வெற்றிக்கு பாகிஸ்தான் தகுதியானது தான்.


Click it and Unblock the Notifications











