Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாழணும்.. இல்லாட்டி வீழணும்.. எக்குத்தப்பான எலிமினேட்டரில் இன்று மோதும்.. ஆர்சிபி - சன் ரைசர்ஸ்!

அபுதாபி : நேற்றைய தகுதிச்சுற்றின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வெற்றி கொண்டுள்ளது.

Recommended Video

ஐ.பி.எல். 2020: ஐதராபாத்-பெங்களூரு இன்று மோதல், யார் வெளியேற போவது?

இந்நிலையில் அபுதாபியில் நடைபெறவுள்ள இன்றைய எலிமினேட்டர் சுற்று போட்டியில் ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

இரண்டாவது சான்ஸ் என்பது இந்த போட்டியில் இல்லை என்பதால், இந்த போட்டியில் வெற்றி பெற இரண்டு அணிகளும் தீவிரமாக உள்ளன.

மும்பை இந்தியன்ஸ் வெற்றி

மும்பை இந்தியன்ஸ் வெற்றி

லீக் போட்டிகளை முடித்து ஐபிஎல்லின் 8 அணிகளில் 4 அணிகள் பிளே-ஆப் சுற்றிற்கு முன்னேறியுள்ளன. நேற்றைய தகுதிச்சுற்று முதல் போட்டியில் 57 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேபிடல்சை வெற்றி கொண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

சன்ரைசர்ஸ் -ஆர்சிபி மோதல்

சன்ரைசர்ஸ் -ஆர்சிபி மோதல்

இந்நிலையில் இன்றைய எலிமினேட்டர் சுற்றில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதவுள்ளன. இதில் வெற்றிபெறும் அணி இரண்டாவது தகுதிச்சுற்றில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் மோதும், அதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இறுதிப்போட்டி வரும் 10ம் தேதி துபாயில் நடைபெறவுள்ளது.

தொடர் வெற்றியில் சன்ரைசர்ஸ்

தொடர் வெற்றியில் சன்ரைசர்ஸ்

இன்றைய எலிமினேட்டர் சுற்றில் மோதும் சன்ரைசர்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இரண்டாவது வாய்ப்பு இல்லாததால் இன்றைய போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சன்ரைசர்ஸ் அணி லீக் போட்டிகளின் ஆரம்பத்தில் சொதப்பினாலும் கடந்த 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்று வலிமையான அணியாக மாறியுள்ளது.

சொதப்பும் ஆர்சிபி

சொதப்பும் ஆர்சிபி

ஆனால் ஆரம்பத்தில் சிறப்பான அணியாக தொடர் வெற்றிகளை அளித்துவந்த ஆர்சிபி அணி கடந்த சில போட்டிகளில் சொதப்பி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற இமாலய கேள்வி எழுந்துள்ளது. சன்ரைசர்ஸ் அணி நல்ல பார்மில் இருந்தாலும் ஆர்சிபி அணி வெற்றி முனைப்பில் தீவிரமாக உள்ளது.

ஆர்சிபிக்கு சவால்

ஆர்சிபிக்கு சவால்

ஐதராபாத் அணி இதுவரை இருமுறை கோப்பையை வென்றுள்ள நிலையில், விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி இதுவரை கோப்பையை வெல்லாத நிலை காணப்படுகிறது. இந்த முறை கோப்பைக்காக ஆரம்பம் முதலே தீவிரமாக போராடி வருகிறது ஆர்சிபி. தற்போது வலிமையான அணியாக மாறியுள்ள சன்ரைசர்ஸ் அணி உண்மையிலேயே ஆர்சிபிக்கு மிகுந்த சவாலாகத்தான் இருக்கும்.

துவக்க வீரர்கள் நன்கு ஆடவேண்டும்

துவக்க வீரர்கள் நன்கு ஆடவேண்டும்

சன்ரைசர்ஸ் அணியின் பௌலர்கள் மிகுந்த வலிமையுடன் காணப்படுகின்றனர். இதனால் ஆர்சிபியின் துவக்க வீரர்கள் சிறப்பாக விளையாடவேண்டிய நிலை உள்ளது. அவ்வாறு இல்லாதபட்சத்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாக வேண்டியது வரும்.

கவனத்தில் கொள்ள வேண்டிய ஆர்சிபி

கவனத்தில் கொள்ள வேண்டிய ஆர்சிபி

சன்ரைசர்ஸ் அணி கடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் நிலையில், ஆர்சிபி கடந்த போட்டிகளின் தோல்விகளை கருத்தில் கொண்டு, இன்றைய எலிமினேட்டர் சுற்றில் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயம் உள்ளது. மாறாக அதே மனப்பான்மையில் இன்றைய போட்டியை எதிர்கொண்டால், மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாக நேரிடும். அதனால் இன்றைய போட்டி கடுமையானதாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

Story first published: Friday, November 6, 2020, 12:09 [IST]
Other articles published on Nov 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+