Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்னும் ஒரு போட்டியில் தோத்தா அவ்வளவுதான்.. டோணி எச்சரிக்கை!

நாக்பூர்: நியூசிலாந்து போட்டியில் இந்தியாவின் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள கேப்டன் டோணி, இன்னும் ஒரு தோல்வியைச் சந்தித்தால் நாம் போட்டித் தொடரை விட்டு வெளியேற்றப்படும் அபாயம் உள்ளதாக எச்சரி்துள்ளார்.

தற்போது இந்திய அணி வாழ்வா சாவா நிலையில் இருப்பதாகவும், மிகவும் கவனமாக இருந்தாக வேண்டி நிலை உள்ளதாகவும் டோணி கூறியுள்ளார்.

மீதமுள்ள 3 போட்டிகளில் இந்தியா கட்டாயம் வென்றாக வேண்டும். ஒரு போட்டியில் தோற்றால் கூட சிக்கல்தான் என்றும் டோணி எச்சரித்துள்ளார்.

3 போட்டிகளிலும் வெல்ல வேண்டும்

3 போட்டிகளிலும் வெல்ல வேண்டும்

இதுகுறித்து டோணி கூறுகையில், நிலைமை சிக்கலாகவே உள்ளது. மீதமுள்ள 3 போட்டிகளிலும் நாம் வென்றாக வேண்டும்.

முதல் போட்டியில் தோற்றாலே சிக்கல்தான்

முதல் போட்டியில் தோற்றாலே சிக்கல்தான்

எப்போதுமே முதல் போட்டியில் தோற்றால் நிச்சயம் நமது நிலை வாழ்வா சாவா நிலையில்தான் இருக்கும். அதுதான் தற்போதும் நடந்துள்ளது.

பாக்., ஆஸி, வங்கதேசத்தை வெல்ல வேண்டும்

பாக்., ஆஸி, வங்கதேசத்தை வெல்ல வேண்டும்

நாம் அடுத்து பாகிஸ்தான், வங்கதேசம், ஆஸ்திரேலியா ஆகியவற்றுடன் மோதவுள்ளோம். இதில் தோல்வி அடையாமல் இருக்க வேண்டும். ஒரு தோல்வியைச் சந்தித்தால் கூட சிக்கலாகி விடும்.

பாகிஸ்தானுடன் அடுத்த மோதல்

பாகிஸ்தானுடன் அடுத்த மோதல்

மார்ச் 19ம் தேதி நமது அடுத்த போட்டியில் பாகிஸ்தானுடன் மோதவுள்ளோம். ஏற்கனவே நாம் பாகிஸ்தானை வென்றுள்ளோம். எனவே நிச்சயம் இதிலும் வெல்ல முயற்சிப்போம். வெல்வோம் என்று நம்புகிறேன் என்றார் அவர்.

வங்கதேசம் - ஆஸ்திரேலியா

வங்கதேசம் - ஆஸ்திரேலியா

பாகிஸ்தான் போட்டியை முடித்த பின்னர் மார்ச் 23ம் தேதி பெங்களூரில் வங்கதேசத்தை இந்தியா சந்திக்கவுள்ளது. கடைசியாக மார்ச் 27ம் தேதி ஆஸ்திரேலியாவுடன் அது மோதவுள்ளது.

Story first published: Thursday, March 17, 2016, 9:50 [IST]
Other articles published on Mar 17, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+