
ரஹானே கேப்டன்
டோணி, கோஹ்லி போன்ற சீனியர் வீரர்களுக்கு ஓய்வு தரப்பட்டுள்ள நிலையில், இந்திய அணிக்கு இளம் வீரர் அஜிங்ய ரஹானே தலைமை தாங்குவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து வீரர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

புதிய விதிமுறை
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் வாரியம், மாற்றியமைத்த, ஒருநாள் போட்டிகளுக்கான புதிய விதிமுறைகள், ஜூலை 5ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றது.

பேட்ஸ்மேன்களுக்கு கஷ்டம்
பேட்டிங் பவர் பிளே ரத்து, எந்த வகை நோ-பால்களுக்கும் ஃப்ரீ ஹிட், கூடுதலாக ஒரு ஃபீல்டரை கடைசி 10 ஓவர்களின்போது, 30 யார்ட் சர்க்கிளை தாண்டி வெளியே நிறுத்திக்கொள்ள அனுமதிப்பது போன்ற விதிமுறைகள் அவற்றில் அடங்கும். பேட்ஸ்மேன் மற்றும் பவுலர்கள் இடையேயான சமமான போட்டியை உறுதி செய்ய இம்மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

புது அனுபவம்
இந்தியா-ஜிம்பாப்வே போட்டிகளின்போது புதிய விதிமுறைகள்தான் அமலில் இருக்கும். இதுகுறித்து ரஹானே கூறியுள்ளதாவது: புதிய விதிமுறைகளின் கீழ் இப்போதுதான் முதல் ஆட்டத்தை ஆட உள்ளோம். இது புது அனுபவமாக இருக்கும். முதல் போட்டியின்போதுதான், அதன் சாதக-பாதகங்களை அனுபவப்பூர்வமாக உணர முடியும்.

சவால்
புதிய விதிமுறைகளின்கீழ் விளையாடுவது இந்திய அணிக்கு சவாலாக இருக்கும். எதிலெல்லாம் மாறுதல்களை கொண்டுவர வேண்டும் என்பதை
ஆடும் சூழ்நிலைக்கு ஏற்பவே சரி சீர் செய்துகொள்ள முடியும். இவ்வாறு ரஹானே கூறியுள்ளார். பலம் குறைந்த வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா இழந்தது. இந்நிலையில், ஜிம்பாப்வேக்கு கிளம்பும் முன்பே ரஹானே சவால்.. கஷ்டம் என பேச ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











