Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஷார்ஜா மைதானத்துல விளையாடறது ரொம்பவே கஷ்டமானது... ஷ்ரேயாஸ் ஐயர்

ஷார்ஜா : ஷார்ஜாவின் மைதானத்தில் விளையாடுவது மிகவும் கடினமானது என்று டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் குறிப்பிட்டுள்ளார்.

ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் 38 பந்துகளில் 88 ரன்களை குவித்து ஆட்ட நாயகன் விருதினை பெற்றுள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர்.

88 ரன்களை குவித்த ஷ்ரேயாஸ்

88 ரன்களை குவித்த ஷ்ரேயாஸ்

ஷார்ஜாவில் நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 38 பந்துகளில் 88 ரன்களை குவித்து ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ரன்களை குவிப்பது கடினம்

ரன்களை குவிப்பது கடினம்

இருந்த போதிலும் ஷார்ஜாவின் மைதானத்தில் விளையாடுவது மிகவும் கடினமானது என்று ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். குறுகிய மைதானத்தை கொண்டுள்ளதால் அங்கு விளையாடி ரன்களை எடுப்பது கஷ்டம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆயினும் அந்த மைதானத்தில் விளையாடுவது திரில்லானது என்றும் அவர் கூறியுள்ளார்.

பௌலர்களை சிறப்பான பயன்படுத்துகிறேன்

பௌலர்களை சிறப்பான பயன்படுத்துகிறேன்

தான் அன்டர் 19 போட்டிகளுக்காக ஷார்ஜா மைதானத்தில் விளையாடியுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ஆரம்பத்தில் தான் சிறிது நேரம் எடுத்து கொள்வதாகவும் பிறகு பௌலர்களை சரியான முறையில் பயன்படுத்துவதாகவும் இந்த முறை தனக்கு சிறப்பாக வொர்க்-அவுட் ஆவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்மார்ட் வழிமுறைகள்

ஸ்மார்ட் வழிமுறைகள்

தனக்கு கடின உழைப்பு மற்றும் ஸ்மார்ட்டான வழிமுறைகள் மட்டுமே கைகொடுப்பதாகவும் தான் அதிர்ஷ்டத்தை நம்பியிருக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான வெற்றி மிகுந்த திருப்தியளிப்பதாகவும் ஷ்ரேயாஸ் ஐயர் மேலும் குறிப்பிட்டார்.

Story first published: Sunday, October 4, 2020, 23:22 [IST]
Other articles published on Oct 4, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+