யப்பா உமேஷ் யாதவா... அவரேட பந்த சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்... கிரீன் அச்சம்
சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய ஏ அணிகளுக்கிடையில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் 125 ரன்களை அடித்து அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரர் கேமரான் கிரீன்
இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வரும் 17ம் தேதி இவர் விளையாடவுள்ளார். இது இவரது முதல் போட்டியாகும்.

இந்நிலையில் உமேஷ் யாதவின் பந்துவீச்சை சமாளிக்க தான் மிகவும் சிரமப்பட்டதாக கிரீன் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய ஏ அணிகளுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 125 ரன்களை அடித்து அதகளம் செய்துள்ளார் ஆஸ்திரேலிய இளம் வீரர் கேமரான் கிரீன். ஆயினும் உமேஷ் யாதவின் பந்து வீச்சை சமாளிப்பது தனக்கு மிகவும் சிரமமாக இருந்ததாக கிரீன் தெரிவித்துள்ளார். இவர் தனது முதல் டெஸ்ட் போட்டியை வரும் 17ம் தேதி விளையாடவுள்ளார்.
வில் புகோவ்ஸ்கி, ஜோ பர்ன்ஸ் மற்றும் டிம் பெய்ன் ஆகியோரின் விக்கெட்டுகளை இந்த போட்டியில் வீழ்த்தியுள்ள உமேஷ் யாதவ், வரும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ளார். இதனிடையே உமேஷ் யாதவிற்கு உலக தரத்திலான திறமைகள் அதிகமாக உள்ளதாகவும் கிரீன் பாராட்டு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications