நைட்டெல்லாம் தூங்கவே இல்ல...அடுத்தடுத்த விக்கெட்டுகள்... நனவான தந்தையின் கனவு!
மெல்போர்ன் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 2வது டெஸ்ட் போட்டி நேற்றைய தினம் துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அடித்த 195 ரன்களை இந்தியா கடந்துள்ளது. முதல் இன்னிங்சில் பௌலிங் செய்த முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதனிடையே, இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளில் முகமது சிராஜ் விளையாட வேண்டும் என்ற தன்னுடைய மறைந்த தந்தையின் கனவு நிறைவேறியுள்ளதாக சிராஜின் சகோதரர் இஸ்மாயில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா 195 ரன்கள்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்ட நிலையில், இரண்டாவதாக களமிறங்கிய இந்திய அணி, அந்த ரன்களை கடந்துள்ளது.

2 விக்கெட்டுகள் அவுட்
இந்த போட்டியின் மூலம் சர்வதேச அளவில் தனது முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாடியுள்ளார் பௌலர் முகமது சிராஜ். அவர் முதல் இன்னிங்சில் மார்னஸ் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோரின் விக்கெட்டுகளை தலா 48 மற்றும் 12 ரன்களில் அவுட் செய்துள்ளார்.

நெருக்கடியில் சிராஜ்
கேப்டன் விராட் கோலி இல்லாத இந்த போட்டியில் தனது முதல் போட்டியை துவக்கியுள்ள சிராஜ், பல்வேறு நெருக்கடியிலும் ஆஸ்திரேலியாவின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதனிடையே, இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் சிராஜ் விளையாட வேண்டும் என்ற தனது தந்தையின் கனவு நனவாகியுள்ளதாக சிராஜின் சகோதரர் கூறியுள்ளார்.

பெருமையான தருணம்
சிராஜ் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளதன்மூலம் தங்களது ஒட்டுமொத்த குடும்பமும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் முந்தைய நாள் இரவு யாருமே தூங்கவில்லை என்றும் சிராஜின் சகோதரர் இஸ்மாயில் சிராஜ் தெரிவிததுள்ளார். மேலும் அதிகாலை 4 மணிக்கே தாங்கள் தொலைக்காட்சியை ஆன் செய்ததாகவும், மிகவும் பெருமையாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications