Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டீமாக ஆடினோம்.. கோப்பையைத் தட்டிப் பறித்தோம்.. வார்னர் பெருமிதம்

பெங்களூரு: இது ஒரு ஒட்டுமொத்த குழு முயற்சி. டீமாக ஆடினோம். கோப்பையை தட்டிப் பறித்தோம் என்று கூறியுள்ளார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர்.

வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அட்டகாசமான ஆட்டத்தால் வெற்றியை நோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருந்த ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி யாரும் எதிர்பாராத வகையில் சுருண்டு போய் தோல்வியைத் தழுவியது.

இந்த வெற்றிக்கு மொத்த டீமும் காரணம் என்று வார்னர் பெருமிதத்துடன் கூறியுள்ளார். டீமாக ஆடியதால் கிடைத்த வெற்றி இது என்றும் அணியினரை அவர் பாராட்டியுள்ளார்.

கோஹ்லிக்குப் பாராட்டு

கோஹ்லிக்குப் பாராட்டு

போட்டிக்குப் பின்னர் அவர் பேசும்போது பெங்களூரு கேப்டன் விராத் கோஹ்லியையும் பாராட்டத் தவறவில்லை. அவர் மாபெரும் கேப்டன் என்றும் கோஹ்லிக்கு வார்னர் புகழாரம் சூட்டினார்.

குழுவாக ஆடியதால் கிடைத்த வெற்றி

குழுவாக ஆடியதால் கிடைத்த வெற்றி

வார்னர் மேலும் கூறுகையில், நாங்கள் குழுவாக முயற்சித்தோம். அட்டகாசமான முயற்சி இது. இதுவே எங்களது சாதனைக்குக் காரணம். மிகப் பெரிய, கடினமான பயணமாக இது இருந்தது. ஆனால் கடைசியில் கோப்பையைக் கையில் ஏந்தியபோது அனைத்தும் மறந்து விட்டது.

அருமையான அணி

அருமையான அணி

ஹைதராபாத் அணி அருமையான அணி, இந்த அணிக்குத் தலைமை தாங்கியதும், வீரர்களிடமிருந்து கிடைத்த ஆதரவையும் மறக்க முடியாது. நல்லதொரு அனுபவம் கிடைத்தது.

மிகப் பெரிய ஸ்கோர்

மிகப் பெரிய ஸ்கோர்

200 ரன்களை நாங்கள் எடுக்க முடிந்தது. ஆனால் அதை சேஸ் செய்யக் கூடிய திறமை படைத்தது கோஹ்லி படை. கோஹ்லி ஒரு அருமையான மாபெரும் கேப்டன். அவரிடமிருந்து அவ்வளவு சீக்கிரம் நமது வாய்ப்பைத் தட்டிப் பறித்து விட முடியாது. இந்த சீசனில் அவர் பிரமாதமாக ஆடியுள்ளார்.

பெங்களூரில் வைத்து வென்றது சிறப்பு

பெங்களூரில் வைத்து வென்றது சிறப்பு

அதுவும் பெங்களூரில் வைத்து வெல்வது என்பது மிகக் கடினமானது. நாங்கள் "அண்டர்டாக்ஸ்" ஆகவே இந்தப் போட்டியில் நுழைந்தோம். இருப்பினும் சிறப்பாக பேட் செய்தோம், சிறப்பாக பவுல் செய்தோம், சிறப்பாக பீல்டிங் செய்தோம்.

கொஞ்சம் பீரடிச்சுக்கட்டுமா!

கொஞ்சம் பீரடிச்சுக்கட்டுமா!

இன்னும் 24 மணி நேரத்தில் நான் கரீபியனுக்கு (மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் பங்கேற்க) நான் கிளம்பி விடுவேன். இப்போது கொஞ்சம் பீர் சாப்பிடும் நேரம் என்று சிரித்தபடி பேட்டியை முடித்தார் வார்னர்.

Story first published: Monday, May 30, 2016, 10:56 [IST]
Other articles published on May 30, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+