Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நெட் முதல் நட்டு வரை.... முதல் பால் கண்ணுக்கே தெரியலைனா... நட்டு கலகல!

பிரிஸ்பேன் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் அறிமுக வீரர்களாக நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் களமிறங்கி முதல் இன்னிங்சில் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில், டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாடுவேன் என்று தான் நினைக்கவில்லை என்றும் தான் எதிர்கொண்ட முதல் பந்து தன்னுடைய கண்ணுக்கே தெரியவில்லை என்றும் நடராஜன் தெரிவித்துள்ளார்.

4வது டெஸ்ட் போட்டி

4வது டெஸ்ட் போட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் துவங்கி 4வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அறிமுக வீரர்களாக நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் களமிறங்கி முதல் இன்னிங்சில் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். வாஷிங்டன் சுந்தர் பேட்டிங்கிலும் முத்திரை பதித்துள்ளார்.

3 வடிவங்களிலும் ஆட்டம்

3 வடிவங்களிலும் ஆட்டம்

இந்த டெஸ்ட் தொடரில் நெட் பௌலராக களமிறங்கிய நடராஜன் தற்போது தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்த சுற்றுப்பயணத்தில் 3 வடிவங்களிலும் பங்கேற்று ஆடியுள்ளார். இந்நிலையில் இந்த அனுபவம் குறித்து அவர் தற்போது பேசியுள்ளார்.

நடராஜன் கலகல

நடராஜன் கலகல

மைதானத்தில் ஸ்பின்னர் அஸ்வின் மேற்கொண்ட நேர்காணலில் பேசிய நடராஜன், நெட் பௌலிங்கிலிருந்து நட்டு பௌலராக மாறியது குறித்து தனது உற்சாகத்தை பதிவு செய்தார். டெஸ்ட் போட்டியில் விளையாடுவேன் என்று தான் கனவிலும் நினைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இழுத்துவந்த அஸ்வின்

இந்த இன்டர்வியூவிற்காக கூச்சப்பட்டு வராமல் இருந்த நடராஜனை கட்டாயப்படுத்தி கூட்டி வந்ததாக அஸ்வின் முன்னதாக விளையாட்டாக கூறினார். தொடர்ந்து பேசிய நடராஜன், மிட்செல் ஸ்டார்கின் பந்தை முதல்முறையாக எதிர்கொண்டபோது அந்த பந்து கண்ணுக்கே தெரியலைனா என்று அஸ்வினிடம் தெரிவித்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அனைவரும் சிரித்தனர். இந்த மகிழ்ச்சியான தருணத்தை பிசிசிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

Story first published: Monday, January 18, 2021, 12:27 [IST]
Other articles published on Jan 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+