அந்த வலி அவ்வளவு ஈசி இல்ல... நானும் வேதனையை அனுபவச்சிருக்கேன்… உருகிய முன்னாள் வீரர்
ஹைதராபாத்:உலக கோப்பை தொடரில் அம்பத்தி ராயுடு இடம் பெறாமல் போனதன் வலி, எனக்கு தெரியும், நானும் அதை அனுபவித்திருக்கிறேன் என்று முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண் உருக்கமாக கூறியுள்ளார்.
உலக கோப்பைக்கான கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது.வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டதில் இருந்து பல விமர்சனங்கள் எழுந்தன. அதில் மிக முக்கியமாக ரிஷப் பன்டிற்கு பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டார்.
அதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தாலும், தினேஷ் கார்த்திக் அனுபவ வீரர் என்ற பிசிசிஐ விளக்கத்தை பலரும் ஒரு வழியாக ஏற்று கொண்டனர் என்று சொல்லலாம். 4வது இடத்திற்கான போட்டியில்,அம்பத்தி ராயுடுவிற்கு பதிலாக விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டது, தான் பல தரப்பிலும் கடும் விமர்சனங்களை எழுப்பியது.

முன்னாள் வீரர் கருத்து
அதை பொறுக்காத ராயுடுவே விஜய் சங்கரின் தேர்வை விமர்சித்தார். இதனிடையே உலக கோப்பைக்கான அணியில் அம்பத்தி ராயுடு இடம்பெறாதது குறித்து,இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண் கருத்து தெரிவித்துள்ளார்.

பெரிய ஏமாற்றம்
அவர் கூறியிருப்பதாவது:இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது, நிச்சயமாக அம்பத்தி ராயுடுவிற்கு பெரிய ஏமாற்றம் தான். ஏனெனில் அவர் அணியில் நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்று நானும் எதிர்பார்த்தேன். ஆனால் நடந்ததோ வேறு.

சிறப்பாக செயல்பட்டார்
2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் மேற்கிந்திய தீவுகள் தொடரில் இருந்து ராயுடு அணியில் 4வது வீரராக பேட்டிங் செய்தார். தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டார். அந்தத் தொடரில் அதிக ரன்களையும் எடுத்தார்.

வலி நிறைந்த தருணம்
அனுபவம் அவருக்கு இருந்தும் ஏன் அவரை எடுக்கவில்லை என்பது ஆச்சரியம். இது மிகவும் வலி நிறைந்த தருணம்.அந்த வலியை நானும் 2003ம் ஆண்டில் எதிர்கொண்டிருக்கிறேன். அனுபவித்திருக்கிறேன்.

நம்பிக்கை உள்ளது
சர்வேதேச வீரர்கள் இது போன்ற வலியிலிருந்து கடந்து வருவார்கள்.நிச்சயம் அம்பத்தி ராயுடுவும் கடந்து வருவார். அந்த நம்பிக்கை எனக்கும் உள்ளது என்று கூறினார்.

லக்ஷ்மண் கிடையாது
2003ம் உலகக் கோப்பையில் கேப்டன் சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி களமிறங்கியது. 15 பேர் கொண்ட அந்த அணியில் விவிஎஸ் லக்ஷ்மண் இடம்பெற வில்லை. அந்த உலக கோப்பையில் இந்திய அணி இறுதி போட்டிவரை சென்று ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.


Click it and Unblock the Notifications