Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

7 ரன்னுக்கு மொத்த டீமும் ஆல் அவுட்.. சர்வதேச டி20 போட்டியில் படுமோசமான சாதனை செய்த ஐவரி கோஸ்ட்

அபுஜா: சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த ஸ்கோரை பதிவு செய்து இருக்கிறது. ஐவரி கோஸ்ட் அணி நைஜீரியா அணிக்கு எதிரான சர்வதேச டி20 போட்டியில் வெறும் 7 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இந்த பரிதாபமான சாதனையை செய்து இருக்கிறது ஐவரி கோஸ்ட் அணி.

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை ஆப்பிரிக்க தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் குரூப் சி யில் இடம் பெற்று இருந்த நைஜீரியா மற்றும் ஐவரி கோஸ்ட் அணிகளுக்கு இடையே ஆன போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நைஜீரியா அணி சரமாரியாக ரன் குவித்தது.

ivory coast nigeria t20i

அந்த அணியின் துவக்க வீரர் சுலைமான் 29 பந்துகளில் 50 ரன்கள், மற்றொரு துவக்க வீரர் செலிம் சலா 53 பந்துகளில் 112 ரன்கள் எடுத்தனர். ஐசாக் ஓக்பே 23 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்தார். நைஜீரியா அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் எடுத்தது. ஐவரி கோஸ்ட் அணி இரண்டு நோ பால் மற்றும் 20 வைடுகளை வீசி இருந்தது.

ஐவரி கோஸ்ட் வீரர்களுக்கு சர்வதேச போட்டி அனுபவம் இல்லாதது இதிலேயே வெளிப்படையாக தெரிந்தது. அடுத்து பேட்டிங் செய்த ஐவரி கோஸ்ட் அணி 7.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து வெறும் 7 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. அந்த அணியின் 11 வீரர்கள் எடுத்த ஸ்கோர் - 4, 0, 1, 0, 0, 1, 0, 1, 0, 0* and 0.

ஐவரி கோஸ்ட் அணியில் ஆறு வீரர்கள் டக் அவுட் ஆனார்கள். இந்தப் போட்டியில் நைஜீரியா அணி 264 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்து இருக்கிறது நைஜீரியா.

மறுபுறம் ஐவரி கோஸ்ட் அணி சர்வதேச கிரிக்கெட்டில் மிகக் குறைந்த ஸ்கோர் எடுத்த அணி என்ற சாதனையை செய்து இருக்கிறது. மேலும், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒற்றை இலக்கத்தில் ஆல் அவுட் ஆன முதல் அணி என்ற மோசமான சாதனையையும் செய்து இருக்கிறது.

இதற்கு முன் மங்கோலியா மற்றும் ஐல் ஆஃப் மான் ஆகிய இரண்டு அணிகள் 10 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இருந்ததே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் ஒரு அணி எடுத்த மிகக் குறைந்த ஸ்கோர் ஆக இருந்தது. அந்த சாதனையை ஐவரி கோஸ்ட் அணி முறியடித்து இருக்கிறது.

Story first published: Wednesday, November 27, 2024, 7:24 [IST]
Other articles published on Nov 27, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+