Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சர்ச்சை.. எந்த ஆங்கிளில் பார்த்தும் தெரியவில்லை.. குழம்பிய இந்திய வீரர்கள்.. அஸ்வின் ஓவரில் பகீர்!

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் போட்ட ஓவரில் நடந்த சம்பவம் ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் இந்திய அணி சிறப்பாக பவுலிங் செய்து வருகிறது.இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. அக்சர் பட்டேல் 4, அஸ்வின் 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.

சர்ச்சை

சர்ச்சை

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் போட்ட ஓவரில் நடந்த சம்பவம் ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அஸ்வின் வீசிய 38வது ஓவரில் ஜாக் லீச் அவுட் ஆனார். லெக் குல்லியில் இருந்த புஜாராவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அவுட்

அவுட்

ஆனால் புஜாரா பந்தை சரியாக பிடித்தாரா அல்லது பந்து கீழே குத்திவிட்டதா என்ற சந்தேகம் இருந்தது. இதனால் மூன்றாவது நடுவரிடம் கள நடுவர் சோதனை செய்தார். இதில் முதல் ஆங்கிளில் பந்து கீழே குத்தியதா என்று தெரியவில்லை.

வேறு

வேறு

இதனால் வேறு ஆங்கிளில் சோதனை செய்யப்பட்டது. மொத்தமாக மூன்று ஆங்கிளில் சோதனை செய்தும் பந்து கீழே குத்தியதா இல்லையா என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் இங்கிலாந்து வீரர்களும் இந்திய வீரர்களும் கடுமையாக குழப்பத்திற்கு உள்ளானார்கள்.

குழப்பம்

குழப்பம்

பந்து எப்படி போனது என்பது பெரிய குழப்பமாக இருந்தது. அதன்பின் பெரிய சோதனைக்கு பின் கடைசியில் ஸ்டம்பின் பின் பக்கம் இருந்த கேமரா சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் பந்தை கீழே குத்தாமல் புஜாரா பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பெரிய குழப்பத்திற்கு பின் அந்த பாலில் விக்கெட் கொடுக்கப்பட்டது.

Story first published: Wednesday, February 24, 2021, 22:27 [IST]
Other articles published on Feb 24, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+