Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிரிக்க வைக்கும் கல்லிஸ்.. மீ்ண்டும் இணைந்த காதலி சிலாகிப்பு!

டர்பன்: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஜேக்கஸ் கல்லிஸ் தனது காதலியான மாடல் அழகி ஷமோன் ஜார்டிமுடன் மீண்டும் இணைந்துள்ளார்.

டர்பனில் தனது கடைசி டெஸ்ட் போட்டியை ஆடிக் கொண்டிருக்கிறார் கல்லிஸ். இந்த நிலையில் சமீப காலமாக பிரிந்திருந்த தனது முன்னாள் காதலி ஷமோனுடன் அவர் மீண்டும் இணைந்துள்ளார்.

6 வருடக் காதலை இடையில் கல்லிஸும், ஷமோனும் முறித்துக் கொண்டு தத்தமது வழியில் சென்று கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் பூத்த காதல்

மீண்டும் பூத்த காதல்

இருவருக்கும் இடையிலான பிரிவு இருவரது அன்பையும் உணரச் செய்துள்ளதாகவும், இதனால் இருவரும் மீண்டும் நெருக்கமாகியுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

ஓய்வுக்குப் பின் திருமணம்

ஓய்வுக்குப் பின் திருமணம்

கல்லிஸ் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதும், ஷமோனை அவர் திருமணம் செய்யப் போவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மாடல் அழகி, நடிகை

மாடல் அழகி, நடிகை

ஷமோன் ஒரு மாடல் அழகி ஆவார். அதேசமயம் நடிகையாகவும் இருக்கிறார்.

முதல் பெண் அல்ல

முதல் பெண் அல்ல

கல்லிஸின் வாழ்க்கையில் குறுக்கிட்ட முதல் பெண் ஷமோன் அல்ல. இதற்கு முன்பு மிஸ் தென் ஆப்பிரிக்கா 2002 சின்டி நெல், கல்லிஸ் வாழ்க்கையில் குறுக்கிட்டிருந்தார். இருவரும் நிச்சயதார்த்தம் வரைக்கும் சென்று பின்னர் பிரிந்து விட்டனர்.

அடுத்து வந்த எக்லி

அடுத்து வந்த எக்லி

அதன் பின்னர் மிஸ் தென் ஆப்பிரிக்கா 2003 போட்டியில் முதல் ரன்னர் அப்பாக வந்த மரிசா எக்லியுடன் காதல் கொண்டார் கல்லிஸ். இதுவும் குறுகிய காலத்திலேயே குலைந்து போனது.

2007 முதல் ஷமோன்

2007 முதல் ஷமோன்

அதன் பின்னர் 2007 முதல் 6 வருடமாக ஷமோனைக் காதலித்து வந்தார் கல்லிஸ். இடையில் இவர்களது காதலில் விரிசல் வந்தது. ஆனால் தற்போது இருவரும் மீண்டும் நெருக்கமாகியுள்ளனராம்.

இந்தியாவுக்கு கல்லிஸுடன் பலமுறை

இந்தியாவுக்கு கல்லிஸுடன் பலமுறை

இந்தியாவுக்கு பலமுறை கல்லிஸுடன் வந்துள்ளார் ஷமோன். குறிப்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஐபிஎல் அணிகளுக்காக கல்லிஸ் ஆடியபோதெல்லாம் கூடவே வந்து உற்சாகப்படுத்தினார் அவர்.

இந்தியாவில் திருமணம் செய்ய விருப்பம்

இந்தியாவில் திருமணம் செய்ய விருப்பம்

இந்தியாவை ஷமோனுக்கு மிகவும் பிடிக்கும். இந்தியக் கிராமத்தில்தான் தனது திருமணம் நடக்க வேண்டும் என்று கூட அவர் ஒருமுறை கூறியிருந்தார்.

சிரிக்க வைப்பார் கல்லிஸ்

சிரிக்க வைப்பார் கல்லிஸ்

கல்லிஸ் குறித்து ஷமோன் கூறுகையில், அருமையான ஜென்டில்மேன் கல்லிஸ். எந்தப் பெண்ணுக்கும் அவரைப் பிடிக்கும். இப்படிப்பட்டவர்களைத்தான் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். அவர் எப்போதும் என்னை சிரிக்க வைப்பார். கடும் மன அழுத்தத்தில் இருந்தாலும் கூட அவரது பேச்சு என்னை வாய் விட்டு சிரிக்க வைத்து விடும்... அதேசமயம், அவர் எப்போதும் கூலாக இருப்பார்.. இது போதாதா ஒரு பெண்ணுக்கு, அந்த ஆணைப் பிடித்துப் போக.. எனக்கு மிகவும் பிடித்தவர் கல்லிஸ் என்று சிலாகித்துக் கூறியுள்ளார்.

Story first published: Sunday, December 29, 2013, 13:25 [IST]
Other articles published on Dec 29, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+