Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே நோ-பாலில் வைரல் ஆன ஜடேஜா... டிவிட்டரில் பொங்கல் வைத்த ரசிகர்கள்!

டெல்லி: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய கடைசி நாள் டெஸ்ட் போட்டி டெல்லியில் நடந்து வந்தது. இந்த டெஸ்ட் போட்டியில் நேற்று ஜடேஜா எடுத்த விக்கெட் மிகவும் வைரல் ஆகி இருக்கிறது.

அவர் நேற்று இலங்கை முன்னாள் கேப்டன் ஏஞ்சலோ மேத்தியூஸ் விக்கெட்டை வெற்றிகரமாக எடுத்தார். அந்த விக்கெட்தான் தற்போது இணையம் முழுக்க வைரல் ஆகியுள்ளது.

நேற்று அவர் தன்னுடைய பிறந்த நாளை வேறு கொண்டாடினார். அதையும் காரணமாக வைத்து கிரிக்கெட் ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.

நோ-பால் விக்கெட்

நோ-பால் விக்கெட்

நேற்று டெல்லியில் நடந்த இலங்கைக்கு எதிரான நான்காவது நாள் டெஸ்ட் போட்டியில் ஜடேஜா முக்கியமான விக்கெட் ஒன்றை எடுத்தார். இலங்கை முன்னாள் கேப்டன் ஏஞ்சலோ மேத்தியூஸ் விக்கெட்டை நேற்று ஜடேஜா எடுத்தார். ஆனால் அந்த விக்கெட்டில் சந்தேகம் இருந்த அம்பயர் ஒருமுறை மூன்றாவது அம்பயரிடம் சோதனை செய்தார். பின் மேத்யூஸுக்கு விக்கெட் கொடுக்கப்பட்டது. ஆனால் அது பால் நோ-பால் ஆகும். இதை மூன்றாவது அம்பயர் கவனிக்காமல் போய்விட்டார்.

கெத்து

இந்த நிலையில் இதை வைத்து ஜடேஜாவை பலரும் கலாய்த்து வருகின்றனர். இவர் ''ஜடேஜா நினைச்சா நோ பால்ல கூட விக்கெட் எடுக்க முடியும்'' என்று கூறியிருக்கிறார்.

புதுசா ஷு தயாரிக்கணும்

இந்த நிலையில் இவர் ஜடேஜாவை மிகவும் மோசமாக கலாய்த்து இருக்கிறார். அதில் "ஜடேஜாவிற்கான புதிய ஷு இதோ. நோ பால் போடாத அளவிற்கு நீளமாக தயாரிக்கப்பட்டு இருக்கிறது'' என்று போட்டோ போட்டு எழுதி இருக்கிறார்.

இன்றும் நோ பால்

இந்த நிலையில் ஜடேஜா இன்றும் நோ பால் போட்டார். அதை இவர் கலாய்த்து இருக்கிறார். அதில் "கடவுளே மீண்டும் நோ பாலா. முதல் தடவை விக்கெட் கொடுத்துட்டாங்க, நல்லவேளை அவருக்கு இன்னொரு டைம் விக்கெட் கொடுக்கல'' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இவர் ஜடேஜாவால் குழம்பிப்போய் எது நோ பால் என்று விளக்கம் வேறு கேட்டுள்ளார்.

பரிசு

ஜடேஜா நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். இந்தநிலையில அதை வைத்து இவர் கலாய்த்து இருக்கிறார். இது ஜடேஜாவுக்கு கிடைத்த சிறந்த பிறந்த நாள் பரிசு என்று கூறியுள்ளார்.

Story first published: Wednesday, December 6, 2017, 16:56 [IST]
Other articles published on Dec 6, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+