அப்படி பேசினா என்ன அர்த்தம்? போட்டிக்கு இடையே கேள்வி கேட்ட வீரர்.. சர்ச்சையில் சிக்கிய ஜடேஜா!
சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஜடேஜா சொன்ன வார்த்தை ஒன்று பெரிய அளவில் வைரலாகி உள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்ற, டி 20 தொடரை இந்தியா வென்றது.
இதனால் டெஸ்ட் தொடரை எந்த அணி கைப்பற்றும் என்ற கேள்வி எழுந்துள்ளது. டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வென்றுள்ளது.

இரண்டாவது போட்டி
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான டிம் பெயின் இந்திய வீரர்களை கிண்டல் செய்து கொண்டு இருந்தார். பேட்டிங் செய்ய வந்த வீரர்களை கிண்டலாகபேசி கலாய்த்துக் கொண்டு இருந்தார். கடந்த வருடம் நடந்த தொடரிலும் இதேபோல் டிம் பெயின் கிண்டல் செய்தது குறிப்பிடத்தக்கது.

டிம்
கடந்த வருடம் டிம் பெயின் ரிஷாப் பண்ட் இடையே மைதானத்தில் இது தொடர்பாக நடந்த விவாதங்கள் பெரிய அளவில் வைரலானது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் டிம் பெயின் இந்திய பேட்ஸ்மேன்களை கிண்டல் செய்து வருகிறது. இந்த நிலையில் ஜடேஜாவையும் டிம் பெயின் பேட்டிங் செய்யும் போது கிண்டல் செய்தார்.

கிண்டல்
அப்போதுதான் ஜடேஜா டிம் பெயினை பார்த்து மோசமான கெட்ட வார்த்தையில் திட்டினார். இந்தியில் பிரபலமாக இருக்கும் கெட்ட வார்த்தையை சொல்லி டிம் பெயினை ஜடேஜா திட்டினார். இதை கேட்ட டிம் பெயின்.. சிரித்துக் கொண்டே அந்த வார்த்தைக்கு அர்த்தம் கேட்டார். சொல்லுங்கள்.. அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று கேட்டார்.

மீண்டும் மீண்டும்
மீண்டும் மீண்டும் அதே வார்த்தையை சொல்லி அதற்கு அர்த்தம் என்ன என்று டிம் பெயின் கேட்டார். இதற்கு அர்த்தம் சொல்லாமல் சமாளித்த ஜடேஜா கடைசியில்.. அட நானா எப்போது அந்த வார்த்தையை சொன்னேன். நான் உங்களை அப்படி திட்டவில்லை என்று சமாளித்தார். ஆனால் ஜடேஜா இப்படி சொன்ன வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications