Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவர் உள்ளே.... அவர் வெளியே..!! நியூசி.க்கு எதிராக கோலியின் அசர வைக்கும் பிளான்

Recommended Video

WORLD CUP 2019 IND VS NZ SEMIFINAL | இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு

மான்செஸ்டர் : நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணியில் 2 முக்கிய மாற்றங்களுக்கு கோலி தயாராகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெறுகிறது. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி 4வது இடத்தில் உள்ள நியூசிலாந்தை சந்திக்கிறது. உலககெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இந்த போட்டியை காண ஆர்வத்துடன் உள்ளனர்.

இந்திய அணி பலம் வாய்ந்ததாக பேட்டிங் வரிசையை கொண்டிருக்கிறது. ஆனால், பயிற்சி போட்டியில் நியூசிலாந்திடம் இந்தியா தோல்வியடைந்தது நினைவிருக்கலாம். அதனால் இன்றையப் போட்டி இந்திய அணிக்கு சவால் என்பதில் சந்தேகம் இல்லை.

பேட்டிங் வரிசை

பேட்டிங் வரிசை

இந்திய அணியின் மிக பெரிய பலம் என்பது தொடக்க வரிசை பேட்டிங் தான். ரோகித் சர்மா, ராகுல், கோலி ஆகியோர் அணிக்கு பக்க பலம். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யாரும் இதுவரை பெரிய அளவில் சோபிக்கவில்லை.இதுதான் இந்திய அணியின் முக்கிய பிரச்னையாகும்.

பலவீனம்

பலவீனம்

இன்னும் சொல்லப்போனால் அது தான் இந்திய அணியின் மிகப்பெரிய பலவீனமும் கூட. வேகப் பந்துவீச்சில் பும்ரா, ஷமி பக்கபலமாக இருக்கின்றனர். நியூசி.க்கு எதிராக இந்திய அணியில் 2 மாற்றங்கள் இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

வருகிறது மாற்றம்

வருகிறது மாற்றம்

ரிஷப் பன்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக் இடம் பெறுவார் என்று தான் முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதில் தற்போது மிகப்பெரிய மாற்றம் நிகழும் என்று தெரிகிறது. அதன் படி இடது கை ஆட்டக் காரர்கள் தற்போது இல்லை.

நீக்கப்படும் தினேஷ் கார்த்திக்

நீக்கப்படும் தினேஷ் கார்த்திக்

எனவே, பன்ட் அணியில் நீடிப்பார், தினேஷ் கார்த்திக்கை நீக்கிவிட்டு அந்த இடத்தில் ரவீந்திர ஜடேஜாவை அணியில் கோலி சேர்ப்பார் என்று தெரிகிறது. ஏனெனில் தினேஷ் கார்த்திக் இறங்கினாலும் பேட்டிங்கில் 7வது வீரராகவே ஆடுகிறார்.

ஜடேஜா அவசியம்

ஜடேஜா அவசியம்

அவர் ஆடுவதை விட அவருக்கு பதிலாக 10 ஓவர்களை முழுமையாக வீசும் ஜடேஜாவை இறக்கப்படலாம் என்று தெரிகிறது. பேட்டிங்கும் செய்வார் என்பதால் அது அணிக்கு பக்கபலம் என்பதால் அணியில் சேர்க்க திட்டமிட்டு உள்ளார் கோலி. இன்னும் சொல்லப் போனால் ஜடேஜா இடது கை ஆட்டக்காரர் என்பதால் கூடுதல் பலன் கிடைக்கும்.

பவுலிங்கில் யார்?

பவுலிங்கில் யார்?

இலங்கை போட்டியில் போது ஓய்வு அளிக்கப்பட்ட முகமது ஷமி, சாஹல் மீண்டும் அணிக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக், புவனேஸ் குமார் அணியில் நீக்கப்பட வாய்ப்புள்ளது. ஏன் என்றால், இலங்கைக்கு எதிரான போட்டியில் புவனேஸ்வர் குமார் 72 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார்.

3 பேர் தேவையில்லை

3 பேர் தேவையில்லை

மேலும் மான்செஸ்டர் மைதானத்தின் ஆடுகளம் மந்தமாக இருப்பதால் இந்திய அணியில் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் தேவையில்லை. எனவே, ஆல் ரவுண்டர் ஜடேஜாவை தான் டிக் செய்ய கோலி முடிவு செய்திருக்கிறார். ஆக மொத்தம், முழுமையான திட்டமிடலுடன் இந்திய அணி களம் இறங்குகிறது என்றே சொல்லலாம்.

Story first published: Tuesday, July 9, 2019, 13:00 [IST]
Other articles published on Jul 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+