ஜடேஜாவுக்கு அவசர அழைப்பு: இன்று ஆஸியை சந்திக்கிறது இந்தியா

Posted By: Staff

சென்னை: சேப்பாக்கத்தில் இன்று மதியம் ஆஸ்திரிலேயாவுடனான முதல் ஒருதினப் போட்டியில் இந்தியா விளையாட உள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போட்டியில் விளையாட வரும்படி ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு திடீர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இலங்கைக்கு எதிரான தொடரில் ஓய்வு அளிக்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா,, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கான அணியில் சேர்க்கப்படவில்லை.

Jadeja Re-called for Aus Tour

நேற்று நடந்த பயிற்சியின்போது, சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேலுக்கு இடது காலில் சுளுக்கு ஏற்பட்டது. ஏற்கனவே ஓபனர் ஷிகார் தவான், முதல் மூன்று போட்டிகளில் விளையாடுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டார்.

இந்நிலையில் அக்சர் படேலும் காயமடைந்துள்ளதால், ஜடேஜாவுக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று நடக்கும் போட்டிக்கான, 15 வீரர்கள் பட்டியலில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி:

விராட் கோஹ்லி (கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல். ராகுல், மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், அஜன்க்யா ரகானே, எம்.எஸ். டோணி, ஹார்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா,குல்தீப் ஜாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், முகமது ஷமி.

Story first published: Sunday, September 17, 2017, 17:07 [IST]
Other articles published on Sep 17, 2017

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற