Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சர்ஜரி முடிந்தது.. ஆல்ரவுண்டர் ஜடேஜாவிற்கு இப்படி ஒரு நிலைமையா? வைரலாகும் மருத்துவமனை போட்டோ

சிட்னி: இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா கையில் கட்டுடன் இருக்கும் புகைப்படம் பெரிய அளவில் வைரலாகி உள்ளது

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா பேட்டிங் செய்யும் போது காயம் அடைந்தார். வேகமாக வந்த கையில் பந்து பட்டதில் இவருக்கு காயம் ஏற்பட்டது.

இந்த காயம் காரணமாக ஜடேஜா களத்திலேயே துடிதுடித்து போனார். இந்த காயம் காரணமாக சில நிமிடம் இவர் ஓய்வு எடுத்தார்.

மோசம்

மோசம்

ஜடேஜாவிற்கு செய்யப்பட்ட ஸ்கேனில் எலும்பில் விலகல் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் இன்னும் 6 வாரங்களுக்கு ஆட முடியாது என்று இதனால் அறிவிக்கப்பட்டது. கடந்த போட்டியில் இவர் இந்திய அணி இக்கட்டான நிலையில் இருந்த போது பேட்டிங் செய்ய தயாராக இருந்தார்.

தயார்

தயார்

கையில் எலும்பு விலகல் ஏற்பட்டுள்ள நிலையில் பெரிய அளவில் கட்டு மாட்டிக்கொண்டு, பெயின் கில்லர் ஊசிகளை போட்டுகொண்டு நேற்று ஆட தயாராக இருந்தார். ஆனால் இவர் ஆடுவதற்கான சூழ்நிலை நேற்று உருவாக்கவில்லை. ஜடேஜா தனது கையை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எப்படி

எப்படி

இந்த நிலையில் நேற்று இரவு இவருக்கு உடனடியாக சர்ஜரி செய்யப்பட்டுள்ளது. விலகிய எலும்பை சரி செய்யும் சர்ஜரி நேற்று இவருக்கு செய்யப்பட்டது. இதனால் 3 வாரம் இவர் ஓய்வு எடுக்க வேண்டும். அதன்பின் 3 வாரம் இவர் பயிற்சி எடுக்க வேண்டும்.

மீள்வார்

மீள்வார்

கையில் பெரிய கட்டுடன் ஜடேஜா தற்போது தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சில நாட்களுக்கு ஆட முடியாது. எனக்கு சர்ஜரி முடிந்துவிட்டது. விரைவில் நான் களத்திற்கு திரும்புவேன், என்று ஜடேஜா கூறியுள்ளார் .

மோசமான நிலை

மோசமான நிலை

கையில் கட்டுடன் ஜடேஜா இருக்கும் புகைப்படம் பெரிய அளவில் வைரலாகி உள்ளது. இந்திய அணியின் நம்பர் 1 ஆல் ரவுண்டராக ஜடேஜா உருவெடுத்துள்ளார். தனது வாழ்நாள் பார்மில் ஜடேஜா இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் அவர் காயம் அடைந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Story first published: Tuesday, January 12, 2021, 11:00 [IST]
Other articles published on Jan 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+