யார் வந்து இருக்கான்னு பாருங்க.. இவ்வளவு வேகமா.. டிவிஸ்ட் கொடுத்த ஜடேஜா.. அந்த திருப்பம் நடக்குமா?
சிட்னி: இந்திய அணியில் காயம் காரணமாக டி 20 போட்டிகளில் இருந்து நீக்கப்பட்ட ஜடேஜா தற்போது காயத்தில் இருந்து விடுபட்டு இருப்பதாக தகவல்கள் வருகிறது.
இந்திய அணியின் முக்கிமான ஆல் ரவுண்டர் வீரர் ரவீந்தர் ஜடேஜா. ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணிக்காக இவர் மிகவும் சிறப்பாக ஆடி வந்தார்.
ஒருநாள் மற்றும் டி 20 தொடர் இரண்டிலும் இந்திய அணிக்காக இவர் பெரிய அளவில் பங்கு வகித்தார். ஆனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி 20 போட்டியில் இவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

தொடை
அதோடு இவருக்கு தொடையிலும் காயம் ஏற்பட்டது. ஜடேஜாவிற்கு தொடையில் காயம் ஏற்பட்டதால் மீதம் இருக்கும் டி 20 போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டார். மருத்துவர்களின் அறிவுரையின் பெயரில் இவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

எப்படி
இதனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இவர் ஆட வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது காயம் காரணமாக டி 20 போட்டிகளில் இருந்து நீக்கப்பட்ட ஜடேஜா தற்போது காயத்தில் இருந்து விடுபட்டு இருப்பதாக தகவல்கள் வருகிறது. இவருக்கு தொடையில் ஏற்பட்ட காயம் குணமாகிவிட்டது.

ஜிம்
இதன் காரணமாக இரண்டு நாட்களாக இவர் ஜிம்மில் பயிற்சி எடுத்தார். இவர் உடல்நிலை நன்றாக உள்ளது. இந்த நிலையில் இன்று காலை இவர் மைதானத்திலும் பயிற்சியில் ஈடுபட்டார். காலையில் சில மணி நேரங்கள் இவர் நெட் பயிற்சியில் ஈடுபட்டார்.

நெட் பயிற்சி
நினைத்ததை விட வேகமாக இவர் காயம் ஆறிவிட்டது என்று கூறுகிறார்கள். இவ்வளவு வேகமாக இவர் மைதானத்திற்கு வந்தது பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இவர் கலந்து கொள்வாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications