Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கண்டிப்பாக பேட்டிங் செய்வேன்.. பெயின் கில்லர் ஊசி.. விலகிய எலும்போடு களமிறங்கும் "ஆல்ரவுண்டர்" ஜடேஜா

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா பேட்டிங் செய்ய வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வெற்றியை நெருங்கும் நிலையில் இந்தியா அதிரடியாக ஆடி வருகிறது.

இந்திய அணியின் கேப்டன் ரஹானே தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் எல்லோரும் அதிரடியாக ஆடினார்கள். ரோஹித் சர்மா 50, சுப்மான் கில் 31, பண்ட் 97 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு அதிரடி தளம் அமைத்து கொடுத்தனர்.

புஜாரா

புஜாரா

இந்த நிலையில் தற்போது புஜாரா 71 மற்றும் விஹாரி 3 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா பேட்டிங் செய்ய வாய்ப்புள்ளது என்கிறார்கள். முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்யும் போது பந்து பட்டதில் இவருக்கு காயம் ஏற்பட்டது.

ஓய்வு

ஓய்வு

இந்த காயம் காரணமாக சில நிமிடம் இவர் ஓய்வு எடுத்தார். இதனால் ஜடேஜா மீண்டும் களத்திற்கு வருவார் என்றுதான் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் ஜடேஜாவிற்கு செய்யப்பட்ட ஸ்கேனில் எலும்பில் விலகல் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் இன்னும் 6 வாரங்களுக்கு ஆட முடியாது என்று இதனால் அறிவிக்கப்பட்டது.

ஆனால் ஆடுவார்

ஆனால் ஆடுவார்

ஜடேஜா தனது கையை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜடேஜா பெயின் கில்லர் ஊசிகளை போட்டுகொண்டு இன்று ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கையில் எலும்பு விலகல் ஏற்பட்டுள்ள நிலையில் பெரிய அளவில் கட்டு மாட்டிக்கொண்டு, பெயின் கில்லர் ஊசிகளை போட்டுகொண்டு இன்று ஆட உள்ளார்.

தோல்வி

தோல்வி

இன்று விஹாரி அல்லது புஜாரா அவுட் ஆனால் அதன்பின் பேட்ஸ்மேன்கள் யாரும் இல்லை. இதனால் பவுலர்கள் களமிறங்குவார்கள். அதன்பின் ஜடேஜா பேட்டிங் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தோல்வியை தவிர்க்கும் வகையில் இன்று ஜடேஜா பேட்டிங் இறங்க உள்ளார்.

Story first published: Monday, January 11, 2021, 9:18 [IST]
Other articles published on Jan 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+