Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது”... டிஎன்பிஎல்-ல் மன்கட் சர்ச்சை.. ஜெகதீசன் விளக்கம்!

சென்னை: டிஎன்பிஎல் தொடரில் மோசமான செயலில் ஈடுபட்டதற்கு சேப்பாக் அணி வீரர் ஜெகதீசன் மனம் உருகி மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரை போன்று தமிழகத்தில் நடைபெறும் டிஎன்பிஎல் தொடர் நேற்று முதல் தொடங்கியுள்ளது.

இதன் முதல் போட்டியில் நெல்லை கிங்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதின.

இந்த தொடர் தொடங்கிய முதல் நாளே பெறும் சர்ச்சை ஏற்பட்டது.
வசேப்பாக் கில்லீஸ் அணி வீரர் ஜெகதீசன்

விக்கெட் சர்ச்சை

விக்கெட் சர்ச்சை

2வது இன்னிங்ஸில் 4வது ஓவரை பாபா இந்திரஜித் வீச, கௌசிக் காந்தி ஸ்ட்ரைக்கில் இருந்தார். பாபா பந்து வீசுவதற்கு முன்னதாகவே நான் ஸ்ட்ரைக்கரில் இருந்த ஜெகதீசன் எல்லை கோட்டை விட்டு வெளியேறினார். இதனால் மன்கட் முறையில் பாபா இந்திரஜித் அவரை ரன் அவுட் செய்தார்.

அநாகரீக செயல்

அநாகரீக செயல்

இந்த செயலால் கடும் அதிருப்தியடைந்த ஜெகதீசன் பெவிலியன் திரும்பும்போது பாபாவிடம் சண்டையிட்டு கொண்டே சென்றார். மேலும் இரண்டுமுறை தனது நடுவிரலை காட்டுவிட்டு களத்தில் இருந்து வெளியேறினார். இது குறித்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது.

மன்னிப்பு கோரிய ஜெகதீசன்

மன்னிப்பு கோரிய ஜெகதீசன்

இந்நிலையில் தனது செயலுக்கு ஜெகதீசன் மன்னிப்பு கோரியுள்ளார். ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ள அவர், எனது மோசமான செயலுக்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கிரிக்கெட்டிற்காக தான் எனது வாழ்க்கையே உள்ளது. ஆனால் அதில் ஒரு அநியாயமான செயல் நடப்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. இதனால் தான் அப்படி நடந்துவிட்டது.

நாகரீகம் முக்கியம்

நாகரீகம் முக்கியம்

விளையாட்டில் நாகரீகமாக நடந்துக்கொள்வது முக்கியமான ஒன்று. அதனை நான் கடைபிடிக்க தவறிவிட்டேன். மன்னிக்க முடியாத தவறு என்பதை உணர்ந்துள்ளேன். இனி வரும் நாட்களில் நான் சிறப்பான முறையில் நடந்துக்கொள்வதாக ஜெகதீசன் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Friday, June 24, 2022, 18:21 [IST]
Other articles published on Jun 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+