
தொடக்கமே அதிரடி
ஆனால், இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ஏதிரணியின் பந்து வீச்சை சிதறடித்தனர். நிஷாந்த் 57 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து வந்த அஸ்வினும் 16 ரன்களில் வெளியேறினார்.

கலக்கிய ஜெகதீசன்
அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் மறு முனையில் சிறப்பாக ஆடிய ஜெகதீசன் 51 பந்துகளில் 87 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். அவரின் இந்த ரன்களில் முக்கிய சாதனையை படைத்திருக்கிறார்.

ஜெகதீசன் 1000 ரன்கள்
அதாவது, 82 ரன்கள் எடுத்திருந்த போது, டிஎன்பிஎல் தொடரில் 1000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். அதற்காக அவர் எடுத்துக் கொண்ட மேட்ச்சுகளின் எண்ணிக்கை 25 ஆகும்.

அதிக பவுண்டரிகள்
இன்றைய ஆட்டத்தில் அவர் எடுத்த 87 ரன்கள் தான் அதிகபட்சமாகும். அதிலும் அவரது ஸ்டிரைக் ரேட் 170.59 ஆகும். அதில் 12 பவுண்டரிகளை விளாசி இருக்கிறார். அவரது அணியில் இவர் அடித்த 12 பவுண்டரிகள் தான் அதிகம். ஜெகதீசன் அணியின் விக்கெட் கீப்பராகவும் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











