Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ரா போட்ட "நோ பால்".. சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்ட ஜெய்ப்பூர் போலீஸ்!

ஜெய்ப்பூர்: இந்திய கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ராவின் நோ பால் காட்சியை போக்குவரத்து விதி மீறல் விளம்பர போர்டாக வைத்து பும்ராவின் அதிருப்தியை வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளது ஜெய்ப்பூர் போலீஸ்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் இந்தியா பெரும் தோல்வியைச் சந்தித்தது. அப்போது பும்ரா பந்து வீசியபோது போட்ட நோ பால் ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அந்த நோ பால் காட்சியைத்தான் ஜெய்ப்பூர் போலீஸார் விளம்பர போர்டாக வைத்து பலரது அதிருப்தியைச் சம்பாதித்துள்ளனர்.
பும்ராவின் நோ பால் படத்தைப் போட்டு, கோட்டைத் தாண்டி வராதீர்கள். வந்தால் எவ்வளவு பாதிப்பு என்பதை உணர்வீர்கள் என்று வாசகம் போட்டுள்ளனர்.

சாலை விதி மீறல் விளம்பரத்துக்காக

சாலை விதி மீறல் விளம்பரத்துக்காக

அதாவது சாலைகளில் சிக்னலில் உள்ள ஸ்டாப் லைனைத் தாண்டி வரக் கூடாது என்பதை விளக்க இந்த நோ பால் காட்சியைப் போடடுள்ளனர் ஜெய்ப்பூர் போலீஸார். இந்த செயல் பும்ராவை எரிச்சலாக்கி விட்டது. இதுகுறித்து அவர் ஒரு டிவீட் போட்டுளளார்.

வெல்டன் போலீஸ்

அதில், வெல்டன் ஜெய்ப்பூர் போக்குவரத்து போலீஸ். நாட்டுக்காக நாம் செய்யும் சாதனைக்கு கிடைக்கும் மரியாதையைப் பாருங்கள் என்று கூறியுள்ளார் பும்ரா.

தவறு செய்வது மனித இயல்புதான்

இன்னொரு டிவீட்டில், கவலைப்படாதீங்க ஜெய்ப்பூர் போலீஸ். நீங்க தப்பு செஞ்சுட்டீங்கன்னு சொல்ல மாட்டேன். தவறு செய்வது மனித இயல்பு என்றும் நக்கலடித்துள்ளார்.

மன்னிப்பு கேட்ட போலீஸ்

பும்ராவின் இந்த டிவீட்டுக்கு பதிலளித்துள்ள ஜெய்ப்பூர் போலீஸ் இதற்காக மன்னிப்புகேட்டுள்ளது. அதேசமயம், வேண்டும் என்றே இதைச் செய்யவில்லை என்றும் போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வுக்காகவே இதை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

பெங்களூர் போலீஸும்

இதே போல பெங்களூர் நகர காவல்துறை அதிகாரி அபிஷேக் கோயலும் ஒரு டிவீட் போட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அது சர்ச்சையாகவில்லை. ஆனால் ஜெய்ப்பூர் போலீஸார் பெரிய அளவில் விளம்பரப்படுத்தியது பும்ராவை அப்செட்டாக்கி விட்டது.

சமானுக்கு வீசப்பட்ட நோ பால்

சமானுக்கு வீசப்பட்ட நோ பால்

பும்ரா வீசிய அந்த நோ பால், பாகிஸ்தான் அதிரடி வீரர் பகார் சமானுக்கு வீசப்பட்டதாகவும். அந்தப் பந்தில் சமான் கேட்ச் ஆனார். ஆனால் பந்து நோபாலாக போனதால் சமான் தப்பினார், அதன் பிறகு சமான் விளையாடிய விதம், பாகிஸ்தான் வென்ற விதம் அனைவரும் அறிந்ததே.

Story first published: Saturday, June 24, 2017, 12:08 [IST]
Other articles published on Jun 24, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+