Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் வேகப்பந்து வீச்சாளர்.. டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட் எடுத்த ஜேம்ஸ் ஆண்டர்சன்.. மாஸ் சாதனை!

லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 600 விக்கெட்கள் எடுத்த முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்து இருக்கிறார்.

Recommended Video

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 600 விக்கெட்கள் எடுத்த முதல் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் எப்போதும் ஸ்பின் பவுலர்களின் சொர்க்க பூமி என்று கூறலாம். ஷேன் வார்னே, முத்தையா முரளிதரன், அஸ்வின், கும்ப்ளே என்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஸ்பின் பவுலர்கள் நிகழ்த்தாத விக்கெட் சாதனையே கிடையாது.

ஸ்பீட் பவுலர்கள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக பங்காற்றினாலும், விக்கெட் என்று வந்தால் அதில் ஸ்பின் பவுலர்கள்தான் கெத்து.

என்ன சாதனை

என்ன சாதனை

இந்த நிலையில்தான் தற்போது அதே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 600 விக்கெட்கள் எடுத்த முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்து இருக்கிறார். தனது 38 வயதில் அவர் இந்த சாதனையை செய்து இருக்கிறார். அதிலும் இவர் 30 வயதுக்கு மேல்தான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி உச்சபட்ச பார்மில் இருந்துள்ளார். தனது 30வது வயதுக்கு மேல் எடுத்த விக்கெட்களின் எண்ணிக்கை 332!

பாகிஸ்தான் போட்டி

பாகிஸ்தான் போட்டி

பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து விளையாடி வரும் டெஸ்ட் போட்டியில் இவர் இந்த சாதனையை செய்து இருக்கிறார். பாகிஸ்தான் கேப்டன் அசார் அலியின் விக்கெட்டை வீழ்த்தி இவர் 600வது விக்கெட்டை பதவி செய்தார். இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் ஆண்டர்சன் 5 விக்கெட் எடுத்தார். இதன் காரணமாக பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்சிற்கு பாலோ ஆன் பெற்றது குறிப்பிடத்தக்கது.

யார் எல்லாம்

யார் எல்லாம்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முத்தையா முரளிதரன், அணில் கும்ப்ளே, ஷேன் வார்னே ஆகியோர் மட்டுமே 600 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.தற்போது இந்த எலைட் லிஸ்டில் ஆண்டர்சன் இணைந்துள்ளார். 2003ம் ஆண்டு இவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார். 17 வருடங்களில் இந்த சாதனையை இவர் படைத்துள்ளார்.

அதிக விக்கெட்

அதிக விக்கெட்

2018ல் இவர் அதிக விக்கெட் எடுத்த டெஸ்ட் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதானையை படைத்தார். கிளைன் மெக்ராத்தின் 563 விக்கெட் சாதனையை இதன் மூலம் இவர் முறியடித்தார். ஆண்ட்ரசனின் இந்த சாதனையை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை. தற்போது 600 என்ற சாதனையை தொட்டுள்ளார். இந்த போட்டியோடு ஆண்டர்சன் ஓய்வு பெற போகிறார் என்று வதந்தி பரவி வந்த நிலையில் வதந்திக்கு எல்லாம் தனது சாதனை மூலம் ஆண்டர்சன் பதில் அளித்துள்ளார்.

Story first published: Wednesday, August 26, 2020, 18:47 [IST]
Other articles published on Aug 26, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+