For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

900 விக்கெட்டுகளை பூர்த்தி செஞ்சிருக்காரு ஆண்டர்சன்... மெக்கிராத்,அக்ரம் வரிசையில் 3வது வீரராக சாதனை

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரின் 4வது போட்டியில் இடம்பெற்று ஆடி வருகிறார் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்

இந்த போட்டியில் நேற்றைய தினம் சுப்மன் கில் மற்றும் இன்று ரஹானே விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ஆண்டர்சன்.

இதன்மூலம் சர்வதேச போட்டிகளில் அனைத்து வடிவங்களிலும் சேர்த்து 900 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார்.

2 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆண்டர்சன்

2 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆண்டர்சன்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4வது போட்டியில் இடம்பெற்று விளையாடி வருகிறார் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். இந்த போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்சை ஆடி வரும்நிலையில், அணியின் சுப்மன் கில் மற்றும் ரஹானே ஆகிய முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ஆண்டர்சன்.

கேப்டன் ஜோ ரூட் பாராட்டு

கேப்டன் ஜோ ரூட் பாராட்டு

38 வயதான நிலையிலும் சிறப்பான ஆட்டங்களை இங்கிலாந்து அணிக்காக அளித்து வருகிறார் ஆண்டர்சன். அவரது அனுபவம் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு சிறப்பாக உதவும் என்று முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் ஜோ ரூட் பாராட்டு தெரிவித்திருந்தார்.

900 விக்கெட்டுகள் சாதனை

900 விக்கெட்டுகள் சாதனை

இந்நிலையில் சர்வதேச போட்டிகளில் 3 வடிவங்களிலும் சேர்த்து 900 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார் ஆண்டர்சன். இந்தியாவின் 4வது போட்டியின் முதல் இன்னிங்சில் இதுவரை இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அவர் இந்த சாதனையை புரிந்துள்ளார்.

3வது வீரராக சாதனை

3வது வீரராக சாதனை

முன்னதாக க்ளென் மெக்கிராத் (949) மற்றும் வாசிம் அக்ரம் (916)ஆகியோர் சர்வதேச போட்டிகளில் இந்த சாதனைகளை நிகழ்த்தியுள்ள நிலையில் 3வது வேகப்பந்து வீச்சாளராக இந்த சாதனையை புரிந்துள்ளார் ஆண்டர்சன். மேலும் முதல் இங்கிலாந்து வீரராகவும் இதை சாதித்துள்ளார்.

613 விக்கெட்டுகள்

613 விக்கெட்டுகள்

டெஸ்ட் போட்டிகளில் 613 விக்கெட்டுகளையும் ஒருநாள் போட்டிகளில் 269 விக்கெட்டுகளையும் டி20 போட்டிகளில் 18 விக்கெட்டுகளையும் அவர் இதுவரை வீழ்த்தியுள்ளார். ஸ்பின்னர்களில் முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே மற்றும் அனில் கும்ப்ளே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

Story first published: Friday, March 5, 2021, 15:51 [IST]
Other articles published on Mar 5, 2021
English summary
James Anderson completed 900 wickets in International cricket -613 in Tests
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+