நீங்க மனிதரா? இல்லை ஏலியனா? 40 வயதில் பட்டையை கிளப்பும் ஆண்டர்சன்.. இதை நோட் பண்ணீங்களா?
வெல்லிங்டன் : நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது. 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1க்கு0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டியில் வெல்லிங்டனில் நேற்று தொடங்கியது. இதில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
21 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இங்கிலாந்து அணி தடுமாறியது, இதனையடுத்து, பேட்டிங் செய்ய வந்த ஹாரி புருக் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து சதம் விளாசினார்.
315 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற ஸ்கோருடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி , 2வது நாள் ஆட்டத்தை தொடங்கியது. இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹாரி புருக் 186 ரன்களை சேர்த்து பெவிலியன் திரும்பினார்.

இங்கிலாந்து டிக்ளேர்
கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 27 ரன்களில் வெளியேற, பென் ஃபோக்ஸ் டக் அவுட் ஆனார்.
ஸ்டுவர்ட் பிராட் 14 ரன்களிலும், ஒலி ராபின்சன் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்ற ஜோ ரூட் 153 ரன்களை சேர்த்தார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் 8 விக்கெட் இழப்பிற்கு435 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.

ஆண்டர்சன் மேஜிக்
இதனையடுத்து நியூசிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. அப்போது பந்து 40 வயது 210 நாட்களை கொண்ட இளம் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கையில் பந்து வந்தது. முதல் ஓவரிலேயே தன்னுடைய மேஜிக்கை காட்டி அசத்தினார். நட்சத்திர வீரர் கான்வேவை டக் அவுட் ஆக்கிய ஆண்டர்சன், வில்லியம்சனை 4 ரன்களில் வெளியேற்றினார்.

நியூசிலாந்து தடுமாற்றம்
இதே போன்று வில் யங்கும் 2 ரன்களில் ஆண்டர்சன் பந்தை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார். இதில் நியூசிலாந்து அணி முற்றிலும் நிலைக்குலைந்தது. அதிகபட்சமாக டாம் லாத்தம் 35 ரன்களிலும், ஹேன்றி நிக்கோஸ் 30 ரன்களிலும் ஆட்டமிழக்க, 2ஆம் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 138 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

40 வயதுக்கு மேல்
இதில் 40 வயதை கடதும் ஆண்டர்சன் முதல் எடஸ்டில் 7 விக்கெட்டுகளை வீழ்த்த தற்போது 3 விக்கெட்டுகளை சாய்த்து இருக்கிறார். பொதுவாக வேகப்பந்துவீச்சாளர்கள் 35 வயதை தாண்டி விட்டால் பிந்துவீச முடியாமல் ஓய்வு பெற்று டிவடுவார்கள். ஆனால் ஆண்டர்சன் 35 வயதுக்கு மேல் தான் மேலும் 200 விக்கெடடுகளை டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்தி இருக்கிறார். அதிலும் 40 வயதை கடந்த பிறகு 7 டெஸ்டில் 28 விக்கெட்டுகளை ஆண்டர்சன் எடுத்து இருக்கிறார்.

வயது வாரியாக விக்கெட்
பல பிரபலங்கள் தங்கள் வாழ்க்கையை வயதான பிறகு தான் தொடங்கி இருக்கிறார்கள். அதற்கு ஆண்டர்சன் கிரிக்கெட்டில் ஒரு நல்ல எடுத்துக்காட்டு ஆண்டர்சன் தனது 20 முதல் 24 வயதில் 18 போட்டியில் 54 விக்கெட்டுகளையும், 25 வயதிலிருந்து 29 வயது வரை 53 போட்டியில் 214 விக்கெட்டுகளையும், 30 வயதிலிருந்து 34 வயது வரை 54 டெஸ்டில் 212 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கறார் இதனால் இவர் மனிதரா இல்லை ஏலியனா என்று ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications