Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேமரா முன்னாடி பாராட்டுறது.. பின்னாடி திட்டுறது.. சர்ச்சையில் சிக்கும் ஆண்டர்சன்

லண்டன் : இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஆண்டர்சன் பற்றி நீங்கள் பெருமையாக நினைத்துக் கொண்டு இருந்தால் அந்த எண்ணத்தை அடித்து நொறுக்கும் வகையில் ஆண்டர்சன் பற்றிய ஒரு வீடியோ வெளியாகி உள்ளது.

இங்கிலாந்து வீரர் அலஸ்டர் குக் இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் ஐந்தாம் போட்டியோடு ஓய்வு பெற உள்ளார். அவருக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அப்படி ஒரு வாழ்த்து சொல்லும் வீடியோவில் கேமரா ஓடவில்லை என நினைத்து ஆண்டர்சன் பேசிய காட்சிகள் பதிவாகி உள்ளது. அது என்ன என பார்ப்போம்.

சக வீரர்கள் வாழ்த்து வீடியோ

சக வீரர்கள் வாழ்த்து வீடியோ

அலஸ்டர் குக் ஓய்வு பெறுவதை ஒட்டி, அவருடன் சர்வதேச கிரிக்கெட் ஆடிய இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வீடியோ ஒன்றை தயாரித்தது இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு. செல்பி வீடியோவில் அனைவரும் குக்கை வாழ்த்தி, தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து இருந்தனர்.

ஜேம்ஸ் ஆண்டர்சன் வாழ்த்து

ஜேம்ஸ் ஆண்டர்சன் வாழ்த்து

இங்கிலாந்தின் முன்னணி பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பாராட்டிய வீடியோ காட்சியும் அதில் இருந்தது. ஆனால், அதில் ஆண்டர்சன் கேமரா முன் பேசும் காட்சிகள் மட்டுமே உள்ளது. கேமரா ஆப் செய்து விட்டோம் என நினைத்து அவர் சில விஷயங்கள் பேசி உள்ளார். அதில் அவர் பேசிய விஷயங்கள் பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது.

கேமரா ஓடலன்னு நினைச்சு…

கேமரா முன் பேசிய ஆண்டர்சன், "வாழ்த்துக்கள். இது சரியான விஷயம். நல்லது நண்பரே.." என முடித்தார். இதை சொல்லியவுடன் கேமராவை கீழே வைத்த ஆண்டர்சன், "இது (வாழ்த்து) போதும். அந்த ஆள எனக்கு பிடிக்கவே பிடிக்காது. எப்ப பார்த்தாலும், இதை செய்றேன், அதை செய்றேன்னு சொல்லிகிட்டே இருப்பாரு. ஆட்டுக்குட்டி இப்ப வரும், அப்ப வரும்னு. இதெல்லாம் யாருக்கு தேவை? போர் அடிச்சிகிட்டு. அவர் ரெண்டு வருஷம் முன்னாடியே ஓய்வு வாங்கிட்டு போயிருக்கணும்" என கூறினார். அதன் பின் தான் கேமரா ஓடுகிறது என்பதை பார்த்து உடனே அதை ஆப் செய்தார்.

ஆண்டர்சனின் வேடம்

ஆண்டர்சனின் வேடம்

இந்த வீடியோவில் ஆண்டர்சன் சொல்லி இருப்பது, குக் இரண்டு ஆண்டுகளாக சரியாக ஆடவில்லை. அதை ஒப்புக் கொண்டு அப்போதே ஓய்வு பெறாமல், இதை செய்கிறேன், அதை செய்கிறேன் என காலத்தை ஓட்டி விட்டு இப்போது ஓய்வு பெறுகிறார் என்பது தான். ஊரே பாராட்டும் ஒருவரை பற்றி இப்படியா பேசுவார் ஆண்டர்சன்? அவர் மனதில் ஒருவரைப் பற்றி எப்படி சிந்திக்கிறார், வெளியே என்ன பேசுகிறார் என்பது இப்போது வெளியாகி விட்டது. இந்த வீடியோவின் பின்விளைவுகள் என்ன என்பது நாளை தெரிந்துவிடும்.

Story first published: Saturday, September 8, 2018, 13:09 [IST]
Other articles published on Sep 8, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+