Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கண்ணீரை அடக்கி கொண்டு பந்துவீசுவேன்.. கடைசி டெஸ்ட்டில் விளையாடும் ஆண்டர்சன் உருக்கம்

மும்பை : பிரபல இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தன்னுடைய கடைசி சர்வதேச டெஸ்ட் போட்டியில் நாளை மறுநாள் பத்தாம் தேதி விளையாட இருக்கிறார். இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதில் முதல் டெஸ்ட் போட்டி கிரிக்கெட்டின் மெக்காஹ் என்று அழைக்கப்படும் லண்டன் லார்டா மைதானத்தில் வரும் பத்தாம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டி தான் இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு கடைசி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் ஆகும்.

James anderson eng vs wi retirement

42 வயதை நெருங்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன், இதுவரை 187 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 700 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு அதிக சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடிய வீரர் என்ற பெருமை பெற்ற ஆண்டர்சன் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையும் படைத்திருக்கிறார்.

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இதுவரை ஆண்டர்சன் 87 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அதனால் முதல் டெஸ்ட் போட்டியில் அவர் 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வெஸ்ட் இண்டீஸ் எதிராக 100 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்று பெருமையும் சேரும். இதுவரை அவர் மூன்று நாடுகளுக்கு எதிராக 100 டெஸ்ட் விக்கெட்டுகளை வைத்திருக்கிறார்.

குறிப்பாக இந்தியாவிற்கு எதிராக அதிகபட்சமாக ஆண்டர்சன் 149 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். 20 ஆண்டுகள் மேல் விளையாடி வரும் ஆண்டர்சன் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆண்டர்சன், தற்போது என்னுடைய கவனம் எல்லாம் இந்த வாரம் நான் சரியாக விளையாடி பந்து வீசி அணிக்கு வெற்றியை தேடி தர வேண்டும் என்பதுதான்.

இதை நோக்கியே நான் பயிற்சி செய்து வருகின்றேன். தற்போது நான் உணர்ச்சிவசப்பட்டு இருக்கின்றேன். எனினும் போட்டி தொடங்கிய போது கண்டிப்பாக அது மாறும் என்று நினைக்கின்றேன். இப்போது எனக்கு இருக்கும் மிகப்பெரிய பணியே பந்து வீசும் போது நான் அழுதுவிட கூடாது என்பதுதான். கண்ணீரை அடக்கிக் கொண்டு பந்து வீசவேண்டும் என்று முயற்சி செய்து வருகிறேன் என்று ஆண்டர்சன் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணியே பெருவாரியாக இந்த தொடரிலும் விளையாடுகிறது. ஆனால் விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ் மட்டும் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு பதிலாக ஜெமி ஸ்மித் என்ற அதிரடி வீரரும் டில்லியன் பென்னிங்டன் என்ற வேகப்பந்து வீச்சாளரும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

Story first published: Monday, July 8, 2024, 21:01 [IST]
Other articles published on Jul 8, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+