For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அதே டைலர்.. அதே வாடகை.. இந்தியாவை வம்பில் மாட்டி விட்ட புஜாரா, கில்.. என்ன நடந்தது?

எட்ஜ்பாஸ்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட்டில் இந்திய அணி சற்று தடுமாறி வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்த அணி முதலில் பந்துவீசியது.

ரோகித் சர்மா இல்லாததால் தொடக்க வீரராக புஜாரா மற்றும் சுப்மான் கில் ஆகியோர் களமிறங்கினர்.

இதை கவனிதீர்களா?? இந்தியாவின் 3 ஸ்டார் வீரர்கள் படைக்கப்போகும் சாதனை.. இங்கி, டெஸ்டில் கலக்கல் தான்இதை கவனிதீர்களா?? இந்தியாவின் 3 ஸ்டார் வீரர்கள் படைக்கப்போகும் சாதனை.. இங்கி, டெஸ்டில் கலக்கல் தான்

ஆண்டர்சன் வீசிய ஆட்டத்தின் முதல் பந்தே, எந்த ஸ்விங்கம், பவுண்சும் இல்லாமல் விக்கெட் கீப்பரிடம் சென்றது.

ஆண்டர்சன் அபாரம்

ஆண்டர்சன் அபாரம்

இதனால் இந்திய அணிக்கு ரன் குவிக்க நல்ல வாய்ப்பு என கருதப்பட்டது.இங்கிலாந்து வீரர்கள் வீசிய பந்துகளை லாவகமாக விட்டும், அதனை ஷாட்கள் அடித்தும் சுப்மான் கில் ரன் சேர்க்க, வழக்கம் போல் புஜாரா, பாறை போல் நின்று இங்கிலாந்தை வெறப்பேற்றினார். என்ன டா ஆட்டத்தில் சுவாரஸ்யமே இல்லையே என ரசிகர்கள் நினைத்த போது தான் ஆண்டர்சன், தனது திறமையை மீண்டும் நிரூபித்தார்.

சுப்மான் கில் அவுட்

சுப்மான் கில் அவுட்

இந்திய அணி வீரர்களுக்கு காலம்,. காலமாக இருக்கும் மைனசை நன்கு பயன்படுத்தி கொண்ட ஆண்டர்சன், 5வது ஆஃப் ஸ்டம்ப் லைனில் பந்துவீசினார். இதில் வசமாக சிக்கிய சுப்மான் கில் 17 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து, கரு மேகங்கள் சூழ இந்தியாவுக்கு கடும் நெருக்கடி அளித்தது.

சிக்கிய புஜாரா

சிக்கிய புஜாரா

பந்து நன்றாக ஸ்விங் ஆனதால், இந்திய வீரர்களின் மைனஸ் பாயிண்டை நோக்கியே, அதே லைனில் பந்துவீசினர். குறிப்பாக பிராட் வீசிய ஒரு பந்து புஜாராவின் பின்காலில் பட நடுவர் அவுட் கொடுத்தார். ஆனால் புஜாரா டிஆர்எஸ் விதியை பயன்படுத்த, அது நாட் அவுட் என்று ஆனது. இந்த வாய்ப்பை புஜாரா சிறப்பாக பயன்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.

மழையால் ஆட்டம் தடை

மழையால் ஆட்டம் தடை

ஆனால், ஆண்டர்சன் மீண்டும் 5வது ஆஃப் ஸ்டம்ப் லைனில் வலை வரிக்க, புஜாரா அதில் மீன் போல் சிக்கி 46 பந்துகளில் 13 ரன்கள் மட்டுமே பிடித்து ஆட்டமிழந்தார். இதே போன்று விஹாரியும் பாட்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழக்க வேண்டியது. ஆனால் அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை இங்கிலாந்த வீரர்கள் நழுவவிட தற்போது இந்திய அணி 53 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்தது. தற்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டுள்ளது.

Story first published: Friday, July 1, 2022, 18:27 [IST]
Other articles published on Jul 1, 2022
English summary
James Anderson Picks Both indian openers in Edgbaston test: இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட்டில் இந்திய அணி சற்று தடுமாறி வருகிறது
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X