Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அண்ணன் வராரு வழி விடு! 42 வயதில் மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பும் இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன்

லண்டன் : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஆண்டர்சன் படைத்திருக்கிறார். ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 704 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். கடைசியாக ஆண்டரசன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஜூலை 2024 ஆம் ஆண்டு தன்னுடைய 188 வது டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.

42 வயதில் ஆண்டர்சன் தன்னுடைய ஓய்வு முடிவை அறிவித்தார். இந்த நிலையில் ஆண்டர்சன் ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கு பெற தன்னுடைய பெயரை பதிவு செய்திருந்தார். ஆனால் ஆண்டர்சன் எந்த அணியாலும் தேர்வு செய்யப்படவில்லை. மீண்டும் மனம் தளராத ஆண்டர்சன், கிரிக்கெட்டை விட்டு பிரிய மனம் இல்லாமல் மீண்டும் கிரிக்கெட் போட்டியில் விளையாட முடிவெடுத்திருக்கிறார்.

james anderson county cricket

இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட் லங்கசேர் அணியில் விளையாட ஒரு ஆண்டுக்கு ஆண்டர்சன் ஒப்பந்தம் செய்துள்ளார். லங்கசேர் அணிக்காக கடந்த ஜூன் 2024 ஆம் ஆண்டு விளையாடிய ஆண்டர்சன் 35 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரே இன்னிங்சில் ஏழு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த நிலையில் தனது ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆண்டர்சன், லங்கசேர் அணிக்காக மீண்டும் விளையாட ஒப்பந்தமாக இருப்பதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகின்றேன். வரும் சீசனில் மீண்டும் தொழில் முறை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. லங்கசேர் அணி என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் முக்கிய பங்கு ஆற்றி இருக்கிறது.

நான் இளம் வீரராக இருந்த போது எனக்கு வாய்ப்பு கொடுத்து, என்னை ஒரு கிரிக்கெட் வீரராக மெருகேற்றினார்கள். இந்த புதிய ஒப்பந்தம் மூலம் நான் டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 என மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடுவேன் என்று ஆண்டர்சன் கூறியுள்ளார். மேலும் தன்னுடைய உடல் தகுதியை பேணி பாதுகாக்க நான் கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறேன்.

நான் தொடர்ந்து பந்துவீச்சு பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறேன். ஏப்ரல் மாதம் கவுண்டி சீசன் தொடங்குகிறது. அதற்குள் நான் என்னுடைய உடல் தகுதியை மீட்டு எடுப்பேன் என்று ஆண்டர்சன் கூறியுள்ளார். ஆண்டர்சன் வருகை ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனினும் இங்கிலாந்து அணிக்கு தாம் திரும்பி விளையாட போவதில்லை என்று ஆண்டர்சன் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, January 14, 2025, 9:08 [IST]
Other articles published on Jan 14, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+