Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஷசில் இங்கிலாந்துக்கு திடீர் சிக்கல்..! அவருக்கு இப்படி ஆகும்னு யாருமே நினைச்சிருக்க மாட்டாங்க..!

லண்டன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இருந்து இங்கிலாந்தின் ஆண்டர்சன் நீக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மோதும் பாரம்பரிய ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடக்கிறது. இந்த தடவை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடராக ஆஷஸ் தொடர் கருதப்படுவதால், ரசிகர்கள் அதிகளவு எதிர்பார்த்து இருக்கின்றனர்.

James anderson ruled out in ashes 4th test, england cricket board announced

முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் நடந்தது. ஆஸ்திரேலிய வென்றது. 2வது டெஸ்ட் டிராவானது. 3வது டெஸ்டில் இங்கிலாந்து வெல்ல, தொடர் தற்போது 1-1 என சமனில் உள்ளது.

இந்நிலையில், இரு அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி, வரும் 4ம் தேதி மான்செஸ்டரில் துவங்குகிறது. அதில் பங்கேற்கும் 13 பேர் கொண்ட இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது.

அதில், அனுபவ வீரர் ஆண்டர்சன் இல்லை. காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத ஆண்டர்சன் எஞ்சியுள்ள ஆஷஸ் தொடரில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக கிரேக் ஓவர்டன் அணியில் சேர்க்கப்பட்டார்.

இங்கிலாந்து அணி: ஜோ ரூட் (கேப்டன்), ஜோப்ரா ஆர்சர், ஜானி பேர்ஸ்டோவ், ஸ்டுவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜாஸ் பட்லர், சாம் கரண், ஜோ டென்லே, ஜாக் லீச், கிரேக் ஓவர்டன், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ்.

Story first published: Saturday, August 31, 2019, 15:28 [IST]
Other articles published on Aug 31, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+