For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"கோலியை அடக்கி வைக்கணும்" - வெளிப்படையாக போட்டுடைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன் - சூடாகும் 3வது டெஸ்ட்

லீட்ஸ்: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இந்தியா பெரும் பின்னடைவை சந்தித்திருக்கும் நிலையில், கேப்டன் கோலி குறித்து ஆண்டர்சன் தெரிவித்துள்ள கருத்துக்கள் போட்டியின் தகதக களத்தை மேலும் சூடாக்கியுள்ளன.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நேற்று (ஆக.25) தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால், இந்தியா எதிர்பார்த்தது எதுவுமே நேற்று முதல் நாளில் நடக்கவில்லை. ஏமாற்றமே மிஞ்சியது.

7வது முறையாக அவுட்

7வது முறையாக அவுட்

இப்போட்டியில், அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல் களமிறங்கினர். முதல் ஓவரை ஆண்டர்சன் வீசினார். ஆனால், எதிர்பாராதவிதமாக லார்ட்ஸ் டெஸ்ட்டில் சதம் விளாசிய லோகேஷ் ராகுல், முதல் ஓவரிலேயே ஆண்டர்சன் ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல் கேட்ச் ஆகி வெளியேறினார். இதனால், புஜாரா 2வது ஓவரிலேயே களமிறங்கினார். ஆனால், ஒன் டவுன் இறங்கி 9 பந்துகளை சந்தித்த புஜாரா, ஒரேயொரு ரன் மட்டும் எடுத்து அவுட்டானார். ஜேம்ஸ் ஆண்டர்சனின் அவுட் ஸ்விங்கில் புஜாரா கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன் பிறகு, கேப்டன் விராட் கோலி 17 பந்துகளை சந்தித்து 7 ரன்கள் மட்டும் எடுத்து, ஆண்டர்சனின் லைன் அன்ட் லெந்த் பந்தில் கீப்பர் கேட்ச் ஆகி வெளியேறினார். இந்த விக்கெட்டோடு சேர்த்து, டெஸ்ட் போட்டிகளில் ஆண்டர்சனிடம் 7வது முறையாக அவுட்டாகி வெளியேறினார் விராட் கோலி.

தடுமாறும் கோலி

தடுமாறும் கோலி

சர்வதேச கிரிக்கெட்டில் 3 இலக்க ரன்களை எட்ட முடியாமல்.. அதாவது சதம் அடிக்க முடியாமல், விராட் கோலி தொடர்ச்சியாக விளையாடும் 50வது போட்டி இதுவாகும். கடந்த இரண்டு ஆண்டு காலமாக 18 டெஸ்ட், 15 ஒருநாள் மற்றும் 17 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் கோலி, ஒரு சதம் கூட அடிக்கவில்லை. மொத்தமாக 50 போட்டிகளில் அவர் ஒரு சதம் கூட அடிக்காமல் விளையாடி வருகிறார். பிறகு, ரஹானேவும் உணவு இடைவேளைக்கு முன்பே அவுட்டாகி வெளியேறினார். ஓலே ராபின்சனின் துல்லியமான லைன் அன்ட் லெந்த் பந்தில், ரஹானே கீப்பர் கேட்ச் ஆகி வெளியேறினார். 54 பந்துகளை சந்தித்த ரஹானே 3 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுத்து அவுட்டானார். பிறகு ரோஹித் 19, ரிஷப் பண்ட் 2, ஜடேஜா 4 என்று அடுத்தடுத்து பேட்ஸ்மேன்கள் வெளியேற இந்திய அணி 78 ரன்களில் சுருண்டது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து, நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில், விக்கெட் இழப்பின்று 120 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்து ஓப்பனர்கள் ரோரி பர்ன்ஸ், ஹமீத் படேல் ஆகிய இருவரும் எந்தவித சிரமமும் இன்றி இந்திய வேகப்பந்துவீச்சை எதிர்கொண்டனர். பர்ன்ஸ் 52 ரன்களும், ஹமீத் 60 ரன்களும் அடுத்து களத்தில் இருந்தனர்.

அற்புதமாக விளையாடினோம்

அற்புதமாக விளையாடினோம்

இந்நிலையில், போட்டி முடிந்த பிறகு பேசிய ஜேம்ஸ் ஆண்டர்சன், பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், கேப்டன் கோலி குறித்தும் பேசியுள்ளார். அதில், "எதைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்த முயற்சித்தோம், மற்ற விஷயங்கள் எல்லாவற்றையும் புறக்கணிக்க முயற்சி செய்கிறோம். நாம் என்ன செய்கிறோம் என்பதில் உண்மையான கவனம் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதில் எங்கள் அணி தெளிவாக உள்ளது. லார்ட்ஸில் முதல் மூன்று அல்லது நான்கு நாட்கள் மிக அற்புதமாக விளையாடினோம். நாங்கள் அதிகம் விவாதங்களில், வார்த்தை மோதல்களில் ஈடுபடவில்லை. இந்த 3வது டெஸ்ட் போட்டியில், எங்கள் தொடக்க வீரர்கள் விளையாடிய விதம் மிகச்சிறப்பாக இருந்தது, இந்தத் தொடர் முழுவதும் நாங்கள் சரியாக என்ன செய்ய நினைத்தோமோ, அதைச் செய்துள்ளோம்.

அமைதியா வைத்திருக்கணும்

அமைதியா வைத்திருக்கணும்

விராட் கோலியை இந்த போட்டியில் மீண்டும் அவுட் செய்தது சிறப்பு வாய்ந்தது என்று நான் நினைக்கிறேன். பல ஆண்டுகளாக கிரிக்கெட்டில் எங்களுக்குள் மோதல் இருந்து வருகிறது. அவர் ஒரு அற்புதமான வீரர் மற்றும் நீங்கள் ஒரு அணியாக அமைதியாக இருக்க விரும்பும் ஒருவர். தொடர் முழுவதும் நாங்கள் அவருக்கு பந்துவீசிய விதம் மிகவும் நன்றாக இருந்தது என்று நான் நினைக்கிறேன். நாங்கள் அதைச் செய்ய வேண்டும், முடிந்தவரை அவரை அமைதியாக வைத்திருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

அக்ரெஸ்ஸிவ் கோலி

அக்ரெஸ்ஸிவ் கோலி

அதாவது, கோலியை இப்படி அவுட் செய்து, அவரை ரன்கள் அடிக்க விடாமல் செய்தால், அவர் அமைதியாகிவிடுவார் என்று ஆண்டர்சன் நம்புகிறார். லாஜிக்காக அவர் யோசிப்பது, பிளான் செய்வது சரி தான். எந்தவொரு கேப்டனாக இருந்தாலும், அவரை அடக்கிவிட்டால், அந்த அணி அடங்கிவிடும். அதைத் தான், கோலிக்கும் செய்ய நினைக்கிறது இங்கிலாந்து. ஆனால், இதில் கோலி சற்று வித்தியாசமானவர். அவர், சரியாக ரன்கள் அடிக்காத போது தான் ரொம்பவே அக்ரெஸ்ஸிவ்வாக இருப்பார். அணியை மோட்டிவேட் செய்து கொண்டே இருப்பார். அணியில், தாக்கத்தை ஏற்படுத்துவார். இதனை ஆண்டர்சன் புரிந்து கொள்ள வேண்டும். சமீப காலங்களில், குறிப்பாக விராட் கோலி வருகைக்கு பிறகு, இந்திய அணி அகராதியில் இருந்து 'சரண்டர்' எனும் வார்த்தை மெல்ல மெல்ல விலகி வருகிறது. ஒரு போட்டியில் தோல்வி என்றாலும், அடுத்த போட்டியில், மிக வலிமையாக, ஆக்ரோஷமாக கம்பேக் கொடுத்து வருகிறது இந்திய அணி. குறிப்பாக, டெஸ்ட் போட்டிகளில் இதை நீங்கள் காணலாம். இதற்கு முக்கிய காரணம் கேப்டன் விராட் கோலி தான். அவர் ரன்கள் அடித்தாலும் சரி.. அடிக்காவிட்டாலும் சரி.. அணியில் இம்பேக்ட் ஏற்படுத்திக் கொண்டிருப்பார். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், கோலியை அமைதிப்படுத்துவது என்பது கடினம்.

Story first published: Thursday, August 26, 2021, 14:12 [IST]
Other articles published on Aug 26, 2021
English summary
Anderson said Need to Keep quiet Virat Kohli india - கோலி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+