உங்களுக்கு வயசாகிடுச்சு.. ரெஸ்ட் எடுங்க.. இந்தியாவை காலி செய்த வீரரை ஒதுக்கிய இங்கிலாந்து.. ஷாக்
சென்னை: இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக பவுலிங் செய்த ஆண்டர்சனை இங்கிலாந்து அணி நிர்வாகம் அடுத்த போட்டியில் ஓரம்கட்ட உள்ளது.
ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய இந்திய அணி தற்போது படுதோல்வி அடைந்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது.
மீதம் உள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. கேப்டன் கோலிக்கு இது பெரிய பின்னடைவை கொடுத்துள்ளது.

கேப்டன்
இந்த போட்டியில் கேம் சேஞ்சர் என்றால் அது ஜேம்ஸ் ஆண்டர்சன்தான். அதிலும் இரண்டாவது இன்னிங்சில் இவர்தான் பவுலிங்தான் மொத்தமாக ஆட்டத்தை மாற்றியது. இவர் செய்த ரிவர்ஸ் ஸ்விங் மூலம்தான் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.

முதல் இன்னிங்ஸ்
முதல் இன்னிங்சில் இவர் 2 விக்கெட் எடுத்தார். இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட் எடுத்தார். இரண்டாவது இன்னிங்சில் ரஹானே, பண்ட், சுப்மான் கில் போன்ற முக்கிய வீரர்களின் விக்கெட்டை இவர்தான் எடுத்தார். ஆண்டர்சனுக்கு தற்போது 39 வயதாகிறது.

கொஞ்சம் அயர்ச்சி
ஆனாலும் கொஞ்சம் கூட அயர்ச்சி இன்றி பவுலிங் செய்து விக்கெட் எடுத்தார். இவர் இப்படி சிறப்பாக பவுலிங் செய்து விக்கெட் எடுத்தும் கூட தற்போது இங்கிலாந்து அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இவர் ஆட மாட்டார்.

மாற்றம்
இவருக்கு பதிலாக இன்னொரு மூத்த வீரர் ஸ்டூவர்ட் போர்டை இங்கிலாந்து அணி களமிறக்க உள்ளது. ஆண்டர்சன் மூத்த வீரர். இதனால் அவருக்கு ஒவ்வொரு போட்டிக்கும் இடையில் ஓய்வு கொடுக்க இங்கிலாந்து அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

போர்ட்
அதேபோல் ஸ்டூவர்ட் போர்ட் மூன்றாவது டெஸ்டில் ஆட மாட்டார் என்கிறார்கள். இவர்களை மாற்றி மாற்றி ஆட வைக்க இங்கிலாந்து அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆண்டர்சனை போல போர்டும் இந்திய அணிக்கு சவாலாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது .


Click it and Unblock the Notifications