
பணமா முக்கியம்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நான் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தை வேண்டாம் என்று முடிவு செய்து இருக்கிறேன். நாட்டை விட பணம் தான் முக்கியம் என்று நான் முடிவு எடுத்து விட்டேன் என்று ரசிகர்கள் நினைக்கலாம். ஆனால் கடந்த ஜூலை மாதம் நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள முடிவு செய்தேன். ஆனால் அப்போது எனது பெயர் அந்த பட்டியலில் இல்லை.

வாழ்நாள் கௌரவம்
இதனை அடுத்து உலகில் உள்ள பல்வேறு கிரிக்கெட் லீக்கில் விளையாட முடிவு செய்தேன். அந்தத் தொடரில் விளையாடுகிறேன் என்று வாக்குறுதியும் கொடுத்து விட்டேன். இந்த நிலையில் என் வார்த்தையிலிருந்து பின் வாங்கி நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் கொடுத்துள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திட விரும்பவில்லை. நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்காக விளையாடியதை என் வாழ்நாள் கௌரவமாக கருதுகிறேன். எதிர்காலத்தில் நியூசிலாந்து அணிக்காக பெரிய தொடர்களில் விளையாட ஆர்வமாக உள்ளேன்.

முட்டாள் முகம்
என் நாட்டு சக வீரர்களுடன் களத்தில் விளையாட ஆசைப்படுகிறேன். இதற்காக மிட்செல் சாண்டனரின் முட்டாள் முகத்தை தினந்தோறும் பார்க்க வேண்டும் என்றாலும் பரவாயில்லை என்ற முடிவை எடுத்து இருக்கிறேன் என்று நகைச்சுவையாக ஜிம்மி நீஷம் குறிப்பிட்டுள்ளார். நியூசிலாந்தை பொறுத்தவரையில் கிரிக்கெட் விட ரக்பி வீரர்கள் தான் அதிக அளவு ஊதியம் கிடைக்கும்.இதனால் குறைவான ஊதியத்தில் அந்நாட்டு வீரர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர் .

கிரிக்கெட் வாரியம் விளக்கம்
இந்த நிலையில் ஐபிஎல் போன்ற t20 கிரிக்கெட் தொடரில் அதிக பணம் கிடைப்பதால் தற்போது நியூசிலாந்தின் முன்னணி வீரர்கள் தங்களுடைய நாட்டிற்கு விளையாடாமல் பிற டி20 லீக் தொடரில் விளையாட ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏற்கனவே பவுல்ட், கோலின் டி கிராம் ஆகியோர் வரிசையில் தற்போது ஜிம்மி நீசமும் இணைந்துள்ளார். இந்த நிலையில் வீரர்கள் விலகல் குறித்து கருத்து தெரிவித்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம், வீரர்களுடைய முடிவை மதிப்பதாகவும், அவர்கள் எப்போது விரும்பினாலும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்காக விளையாட வாய்ப்பு வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











