உலகின் நம்பர்.1 பேட்ஸ்மேன் காலி.. 17 வருஷமாச்சு.. இன்னமும் ஆண்டர்சன் மாஸ் குறையல
லண்டன்: நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விக்கெட்டை ஆண்டர்சன் கைப்பற்றி அசத்த, அந்த அணி 2வது விக்கெட்டை இழந்துள்ளது.
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், முதல் போட்டி, லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது.
இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் ஓலே ராபின்சன் மற்றும் ஜேம்ஸ் பிரேஸே ஆகியோருக்கு முதன் முதலாக டெஸ்ட் கிரிக்கெட் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணியில், டிரெண்ட் போல்ட் அணியில் சேர்க்கப்படவில்லை.

50+ பார்ட்னர்ஷிப்
இந்த நிலையில், நியூசிலாந்து அணியில் டாம் லாதம், டெவோன் கான்வே தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், முதல் நாள் ஆட்டத்தின் முதல் 'ட்ரிங்க்ஸ்' இடைவேளை வரை, இங்கிலாந்து ஒரு விக்கெட் கூட வீழ்த்தாமல் இருந்தது. லார்ட்ஸ் பிட்ச் பெரிதாக எதற்கும் ரியாக்ட் செய்யவில்லையா அல்லது இங்கிலாந்து பவுலர்கள் அவ்வளவு மந்தமாக வீசினார்களா என்று தெரியவில்லை.

முதல் விக்கெட்
அதேசமயம், இன்றைய போட்டியில் அறிமுக செய்யப்பட்ட ஓலே ராபின்சன், தொடக்க வீரர் டாம் லாதமை போல்டாக்கினார். ஆஃப் ஸ்டெம்ப்புக்கு வந்த பந்தை டிஃபன்ஸ் ஆட முயன்ற போது, பந்து இன்சைட் எட்ஜ் ஆகி போல்டானார். இதன் மூலம், தனது முதல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் இன்னிங்சிலேயே முதல் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.

ஆண்டர்சன் செம
இதனையடுத்து, நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் களமிறங்கினார். 33 பந்துகளை சந்தித்து 13 ரன்களை எடுத்திருந்த வில்லியம்சன், சீனியர் பவுலர் ஆண்டர்சன் பந்துவீச்சில் போல்டானார். இவருக்கும் எமனாக அமைந்தது இன்சைட் எட்ஜ் தான். மிக பொறுமையாக ஷாட் ஆடியதால், பந்து இன்சைட் எட்ஜ் ஆகி ஸ்டெம்ப்பை பதம் பார்த்தது.

வேற லெவல் செய்கை
இதனால், நியூசிலாந்து இப்போது இரண்டாவது விக்கெட்டை இழந்துள்ளது. 18 வருடங்களுக்கு முன்பு, அதாவது 2003ம் ஆண்டு இதே லார்ட்ஸ் மைதானத்தில் இளம் வீரனாக களமிறங்கிய ஆண்டர்சன், இத்தனை ஆண்டுகள் கழித்து, மீண்டும் அதே லார்ட்ஸில் பந்து வீசுகிறார். விக்கெட்டும் எடுக்கிறார். ஒரு பவுலர் இத்தனை ஆண்டுகாலம் தாக்குப்பிடித்து என்பதெல்லாம் வேற லெவல் செய்கை.


Click it and Unblock the Notifications