Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போனி கபூர் மகளுடன் தினேஷ் கார்த்திக்.. தீயாய் பரவி வரும் போட்டோஸ்.. காரணம் கேட்டு பிரமித்த ரசிகர்கள்

மும்பை: பிரபல பாலிவுட் நடிகையுடன் தினேஷ் கார்த்திக் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.

நடிகர் ஸ்ரீ தேவி - தயாரிப்பாளர் போனி கபூரின் மகளுமான ஜான்வி கபூர் தற்போது இந்தி திரையுலகை கலக்கி வருகிறார்.

முன்னணி நடிகையான வலம் வரும் ஜான்வி கபூர், அடுத்ததாக "Mr and Mrs Mahi" திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பரவி வரும் புகைப்படங்கள்

பரவி வரும் புகைப்படங்கள்

இந்த திரைப்படம் குறித்த போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகியிருந்தது. ஆனால் அதனுடன் சேர்ந்து வெளியான மற்ற புகைப்படங்கள் தான் இணையத்தை கலக்கின்றன. அதாவது ஜான்வி கபூரும் முன்னணி கிரிக்கெட் வீரருமான தினேஷ் கார்த்திக்கும் அப்படத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றனர். அவர்கள் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் அது.

என்ன காரணம்

என்ன காரணம்

விளையாட்டை மையாமாக கொண்டு உருவாக்கப்படும் "Mr and Mrs Mahi" படத்தில் ஜான்வி ஒரு கிரிக்கெட் வீராங்கனையாக நடிக்கிறார். அவர் ஹெல்மெட் அணிந்துக்கொண்டு பேட்டுடன் நிற்கும் காட்சிகள் வெளியாகியிருந்தன. அவருக்கு கிரிக்கெட் பயிற்சி கொடுப்பதற்காக தான் தினேஷ் கார்த்திக் இணைந்துள்ளார்.

தினேஷ் கார்த்திக்கின் அவதாரம்

தினேஷ் கார்த்திக்கின் அவதாரம்

இந்திய அணியில் சரிவர வாய்ப்பு கிடைக்காமல் உள்ள தினேஷ் கார்த்திக் இன்னும் ஐபிஎல் தொடரில் பங்கேற்று வருகிறார். கொல்கத்தா அணியின் சீனியர் வீரராக கடந்த சில ஆண்டுகளாக இருந்து வந்தார். ஆனால் இந்தாண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் கொல்கத்தா அணியும் அவரை கழட்டிவிட்டுள்ளது.

எதிர்காலம் என்ன

எதிர்காலம் என்ன

36 வயதாகும் அவரை இனி அவரை எந்த அணி ஏலம் எடுக்கும் என்பது சந்தேகமாக உள்ளது. இதனால் அவர் கமெண்ட்டேட்டர், பயிற்சியாளர் போன்ற அவதாரங்களை எடுத்து வருகிறார். டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் போது அவரின் கமெண்ட்ரி ரசிகர்களால் அதிக கவனிக்கப்பட்டதால், அதனையே தொடர்ந்து செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, January 28, 2022, 17:51 [IST]
Other articles published on Jan 28, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+