For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவரு ரெடியாயிட்டாரு... இங்கிலாந்து ஹேப்பி..!! ஆனா.. உஷாரா இருக்கணும் டீம் இந்தியா

லண்டன்: முக்கிய வீரர் ஜேசன் ராய் உடல்தகுதி பெற்றுவிட்டதால் பீதி அடைந்துள்ள இங்கிலாந்து அணியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

ஜூன் 14ம் தேதி வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் காயமடைந்த அதிரடி தொடக்க வீரர் ஜேசன் ராய்க்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. அவருக்கு, திங்கட் கிழமை எடுக்கப்பட்ட 2வது ஸ்கேனில் காயம் நன்றாக குணமடைந்திருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து ஜூன் 30ம் தேதி இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஜேசன் ராய் ஆடும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஜேசன் ராய் ஆட மாட்டார். இருப்பினும், அவர் வலைப்பயிற்சியில் பேட்டிங் பயிற்சி மேற்கொண்டார்.

கடைசி 2 போட்டிகள்

கடைசி 2 போட்டிகள்

தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பார், கடைசி 2 போட்டிகளில் அவர் ஆடுவார் என்று இங்கிலாந்து அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து அணி, அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்து கொள்ள தங்களது கடைசி 3 ஆட்டங்களில் குறைந்தது 1 போட்டியிலாவது ஜெயிக்க வேண்டும்.

3 சதங்கள்

3 சதங்கள்

ஜேசன் ராய் வரவை அணியினர் எதிர்நோக்கி கொண்டாட காரணம் இருக்கிறது. அவர் தனது கடைசி 6 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 5 முறை அரைசதம் கடந்துள்ளார். சமீபத்திய 8 போட்டிகளில் 3 முறை சதம் அடித்திருக்கிறார்.

தனிநபர் ஸ்கோர்

தனிநபர் ஸ்கோர்

தற்போதைய உலக கோப்பையில் டேவிட் வார்னருக்கு அடுத்த படியாக தனி நபர் என்ற அளவில் அதிக ஸ்கோரை எடுத்தவர் ஜேசன் ராய். வங்கதேசத்துக்கு எதிராக 153 ரன்களை இவர் விளாசினார். ஆனால், அவருக்குப் பதிலாக தொடக்க வீரரான ஜேம்ஸ் வின்ஸ் சொதப்பி வருகிறார்.

சக வீரர்கள் உற்சாகம்

சக வீரர்கள் உற்சாகம்

தற்போது ஜேசன் ராய் வரவால் அணியின் சக வீரர்கள் வெகுவாக உற்சாகம் அடைந்துள்ளனர். அவரது வருகை எந்தளவுக்கு பலனளிக்கும் என்பது போக, போக தெரியும். இங்கிலாந்து அணி வரும் 30ம் தேதி இந்தியாவை எக்பாஸ்டனில் எதிர் கொள்கிறது. ஆகவே, இந்திய அணியும் அவரது வருகையால் முக்கிய மாற்றங்களை மேற்கொள்ளும் என்று தெரிகிறது. தற்போது ஜேசன் ராய் வரவால் அணியின் சக வீரர்கள் வெகுவாக உற்சாகம் அடைந்துள்ளனர். அவரது வருகை எந்தளவுக்கு பலனளிக்கும் என்பது போக, போக தெரியும். இங்கிலாந்து அணி வரும் 30ம் தேதி இந்தியாவை எக்பாஸ்டனில் எதிர் கொள்கிறது. ஆகவே, இந்திய அணியும் அவரது வருகையால் முக்கிய மாற்றங்களை மேற்கொள்ளும் என்று தெரிகிறது.

Story first published: Monday, June 24, 2019, 21:43 [IST]
Other articles published on Jun 24, 2019
English summary
Jason roy likely to play against india in world cup match.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+