இந்தியாவை தோற்கடிக்க திட்டம் போடும் இங்கிலாந்து.. அந்த வீரரை களம் இறக்க முடிவு
எக்பாஸ்டன்: இந்தியாவின் வெற்றிக்கு தடை போடும் வகையில் இன்றைய முக்கிய ஆட்டத்தில் ஜேசன் ராய் விளையாடுவார் என்று இயான் மார்கன் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் மோதுகின்றன. அரையிறுதிக்கு ஆஸ்திரேலியா அணி மட்டுமே இதுவரை தகுதிபெற்றுள்ளது. இந்தியா 5 வெற்றிகளுடன் 11 புள்ளிகள் பெற்றிருந்தாலும், ஒரு வெற்றி இருந்தால் அரையிறுதி உறுதியாகி விடும்.
ஆனால், இங்கிலாந்துக்கு இந்த போட்டி வாழ்வா, சாவா போராட்டம். இந்தியாவுக்கு எதிரான இந்த ஆட்டம், அடுத்து வரும் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து இருக்கிறது.

இங். சிக்கல்
இந்த இரு ஆட்டத்தில் ஒன்றில் இங்கிலாந்து தோற்றாலும் அரையிறுதிக்கு செல்வதில் அதன் நிலைமை சிக்கலாகி விடும். எனவே, வெற்றிபெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து உள்ளது.

7 முறை மோதல்
உலக கோப்பையில் இதுவரை இரு அணிகளும் 7 முறை மோதியுள்ளன அதில், இங்கிலாந்து 3 முறையும், இந்தியா 3 முறையும் வென்றுள்ளன. ஒரு போட்டி சமனில் முடிந்துள்ளது.

நெருக்கடி அளிக்க முடிவு
உலக கோப்பையில் பங்கேற்றுள்ள அணிகளில் இந்திய அணி மட்டும்தான் இதுவரை தோல்வியே சந்திக்காமல் விளையாடி வருகிறது. இங்கிலாந்துக்கு இக்கட்டான போட்டியான இன்றைய போட்டியில் இந்தியா நெருக்கடி தர இங்கிலாந்து முடிவு செய்திருக்கிறது.

வருகிறார் ஜேசன் ராய்
அதற்காக, அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில், காயம் காரணமாக கடந்த சில போட்டிகளில் விளையாடாதாத ஜேசன் ராய் இன்றைய போட்டியில் விளையாடுகிறார் அதனை இங்கிலாந்து கேப்டனான இயான் மோர்கன் தெரிவித்துள்ளார்.

குணமடைந்தார் ராய்
இது குறித்து மார்கன் கூறியதாவது: ஜேசன் ராய் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்துவிட்டார். இந்திய அணிக்கு எதிரான முக்கிய போட்டியில் களமிறங்க தீவிரமாக தயாராகி வருகிறார். அவர் நிச்சயம் இந்த போட்டியில் விளையாடுவார் என்றார்.


Click it and Unblock the Notifications