Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீங்களே சொல்லுங்க.. நம்ம பும்ராவா இது? பேட்டிங் பயிற்சியில் வாய் பிளக்க வைத்த பும்ரா

மெல்போர்ன் : இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளர் பும்ரா ஆஸ்திரேலியாவில் பேட்டிங் பயிற்சி வீடியோவை பிசிசிஐ வெளியிட்டது.

இந்த வீடியோவில் பும்ரா அதிரடியாக பேட்டிங் ஷாட்கள் ஆடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இதை கண்டு ரசிகர்கள் பும்ராவை முன்வரிசையில் பேட்டிங் ஆட வைக்கலாம் என கூறி வருகிறார்கள்.

பும்ரா பந்துவீச்சு சூப்பர்

பும்ரா பந்துவீச்சு சூப்பர்

இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளராக குறுகிய காலத்தில் உயர்ந்தவர் பும்ரா. தற்போது ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார் இந்த இளம் வீரர். பந்துவீச்சில் சிறந்தவரான பும்ரா பேட்டிங்கில் மிகவும் மோசம் என்பதே உண்மை. எனினும், பும்ராவிடம் இந்திய அணி பந்துவீச்சை மட்டுமே எதிர்பார்ப்பதால், அவரது பேட்டிங் பெரிய குறையாக இல்லை.

பயிற்சியில் அடித்து ஆடிய பும்ரா

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நாளை (நவம்பர் 21) முதல் டி20 போட்டியில் ஆட உள்ளது. இந்த போட்டிக்கான வலைபயிற்சியில் ஈடுபட்ட பும்ரா, பந்துகளை சரமாரியாக அடித்து ஆடினார்.

ஆச்சரியம் அடைந்த ரசிகர்கள்

பும்ரா அடித்த ஷாட்களை பார்த்தால் தேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன் ஆடுவதை போல இருந்தது. இதைக் கண்டு ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்தனர். ஒருவர் இந்தியாவின் நான்காவது இடத்தில் களம் இறங்க ஆள் கிடைத்து விட்டது என கூறி இருந்தார்.

பும்ராவின் குறைந்த சராசரி

பும்ராவின் குறைந்த சராசரி

பும்ரா இதுவரை சர்வதேச போட்டிகளிலோ, முதல் தர கிரிக்கெட் போட்டிகளிலோ பெரிய அளவில் பேட்டிங் செய்ததில்லை. அவரது பேட்டிங் சராசரி மிக மிக குறைவாக ஒற்றை இலக்கத்தில் தான் உள்ளது. சராசரி - டெஸ்ட் போட்டி - 1.42, ஒருநாள் போட்டி - 2.75, டி20 - 4.00, முதல் தர போட்டிகள் - 8.12.

Story first published: Friday, April 17, 2020, 21:17 [IST]
Other articles published on Apr 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+