For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நம்பவே முடியலையே.. யாரும் செய்யாத சாதனை.. டாப் கியரில் பறக்கும் பும்ரா.. அதிர வைக்கும் தகவல்!

Recommended Video

Watch Video : Jasprit Bumrah got 3rd rank in test bowling in just 12 matches

மும்பை : இந்திய டெஸ்ட் அணியில் வெறும் 12 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடி இருக்கும் பும்ரா புதிய உச்சத்தை தொட்டு எல்லோரையும் வியக்க வைத்துள்ளார்.

2018ஆம் ஆண்டு தான் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆனார் பும்ரா. அப்போது ஒருநாள் போட்டிகளிலும், டி20யிலும் சிறந்த விளங்கினாலும், டெஸ்ட் போட்டியில் தவித்து விடுவார் பும்ரா என சிலர் விமர்சனம் கூறினார்கள்.

ஆனால், 12 போட்டிகளிலேயே எல்லோரையும் பிரமிக்க வைத்து விட்டார் பும்ரா.

புதிய உச்சம்

புதிய உச்சம்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருடன் பும்ரா 12 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருந்தார். அதற்குள் 62 டெஸ்ட் விக்கெட்களும் வீழ்த்தி விட்டார். இதன் மூலம் ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் புதிய உச்சத்தை எட்டிப் பிடித்துள்ளார்.

பலரும் வியப்பு

பலரும் வியப்பு

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார் பும்ரா. இது எப்படி சாத்தியம் என்று பலரும் வியந்து விட்டனர். 12 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடிய ஒரு வீரர் டாப் 3க்குள் எப்படி நுழைந்தார்? என கேட்டு வருகிறார்கள்.

பந்துவீச்சு சராசரி

பந்துவீச்சு சராசரி

பும்ரா தன் பந்துவீச்சில் 62 விக்கெட்கள் வீழ்த்தியது மட்டுமில்லாமல், மிகக் குறைந்த பந்துவீச்சு சராசரி வைத்துள்ளார். அதாவது, பேட்ஸ்மேன்கள் இவர் பந்தை எதிர்கொள்ளவும், ரன் குவிக்கவும் தடுமாறி உள்ளனர். பும்ராவின் டெஸ்ட் பந்துவீச்சு சராசரி 19.24 மட்டுமே.

டெஸ்ட் தரவரிசை ஏற்றம்

டெஸ்ட் தரவரிசை ஏற்றம்

மேலும், அவரது டெஸ்ட் தரவரிசை முதல் போட்டியில் இருந்து மேலே மட்டுமே ஏறி உள்ளது, ஒரு முறை கூட சரிவை சந்திக்கவில்லை. முதல் டெஸ்டின் முடிவில் டெஸ்ட் தரவரிசையில் 85வது இடத்தை பிடித்தார்.

வெஸ்ட் இண்டீஸ் தொடர்

வெஸ்ட் இண்டீஸ் தொடர்

அதன் பின், ஏற்றத்தை மட்டுமே சந்தித்த அவர் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கு முன் 16வது இடத்தில் இருந்தார். இந்த டெஸ்ட் தொடரில் 13 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். அதில் இரண்டு முறை 5 விக்கெட் மற்றும் ஒரு ஹாட்ரிக் விக்கெட்டும் எடுத்து இருக்கிறார்.

12 டெஸ்டில் மூன்றாம் இடம்

12 டெஸ்டில் மூன்றாம் இடம்

இந்த இரண்டு போட்டிகளை அடுத்து பும்ரா தரவரிசையில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். வெறும் 12 டெஸ்ட் போட்டிகளில் மூன்றாம் இடத்தை எட்டிய வேறு எந்த பந்துவீச்சாளரும் இருப்பதாக தெரியவில்லை.

ஆசிய அளவில் சாதனை

ஆசிய அளவில் சாதனை

மேலும், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் என நான்கு நாடுகளுக்கு எதிராக அவர்கள் சொந்த மண்ணில் ஒரே இன்னிங்க்ஸில் ஐந்து அல்லது அதற்கும் மேற்பட்ட விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார் பும்ரா. ஆசிய அளவில் இந்த சாதனையை செய்த முதல் பந்துவீச்சாளர் பும்ரா தான்.

Story first published: Wednesday, September 4, 2019, 15:47 [IST]
Other articles published on Sep 4, 2019
English summary
Jasprit Bumrah got 3rd rank in test bowling in just 12 matches
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+