Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: மாபெரும் ஜாம்பவான் சாதனையை சமன் செய்த பும்ரா.. 11வது முறையாக 5 விக்கெட் ரெக்கார்டு

IND vs AUS: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பும்ரா 5 விக்கெட்கள் வீழ்த்தினார். டெஸ்ட் போட்டிகளில் அவர் 11 வது முறையாக ஒரே இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் வீழ்த்தி உள்ளார். ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்துவது டெஸ்ட் கிரிக்கெட்டில் முக்கிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் 11 வது முறையாக 5 விக்கெட் வீழ்த்திய பும்ரா பல்வேறு சாதனைகளை உடைத்து இருக்கிறார். அவர் இதுவரை தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியா என ஐந்து நாடுகளில் மொத்தமாக 11 முறை ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.

ind vs aus border gavaskar trophy india vs australia test match vs


இதில் தென்னாப்பிரிக்காவில் மூன்று முறையும், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் தலா இரண்டு முறைகளும் இந்த சாதனையை செய்து இருக்கிறார். இதன் மூலம் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு எஸ் இ என் ஏ (SENA) நாடுகளில் மட்டும் ஏழு முறை ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்திய சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.

இதன் மூலம், இந்த நான்கு நாடுகளில் அதிக முறை 5 விக்கெட் சாதனை படைத்த இந்திய பந்துவீச்சாளர்களில் முதல் இடத்தை கபில் தேவுடன் பகிர்ந்து கொண்டு உள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவ் இந்த நான்கு நாடுகளில் 62 இன்னிங்ஸ்களில் ஏழு முறை 5 விக்கெட் சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.

தற்போது பும்ரா 51 இன்னிங்ஸ்களில் அவரது சாதனையை சமன் செய்து இருக்கிறார். இந்த பட்டியலில் ஜாகிர் கான் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் ஆறு முறை இந்த நான்கு நாடுகளில் 5 விக்கெட் சாதனைகளை நிகழ்த்தி அடுத்த இடத்தில் உள்ளனர். இது மட்டும் இன்றி ஆஸ்திரேலிய மண்ணில் பும்ரா மிகச் சிறந்த ரெக்கார்டை வைத்துள்ளார். அவர் ஆஸ்திரேலியாவில் 19.18 என்ற பவுலிங் சராசரியை வைத்துள்ளார். மேலும், எட்டு போட்டிகளில் 37 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.

Story first published: Saturday, November 23, 2024, 11:31 [IST]
Other articles published on Nov 23, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+