Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ராவுக்கு என்ன ஆச்சு? டெஸ்ட் தொடரில் திடீர் நீக்கம்.. வாய்ப்பை தட்டிச் சென்ற அந்த வீரர்!

Recommended Video

Ind vs SA | Bumrah Ruled Out | பும்ராவுக்கு காயம்.. அணியில் இருந்து திடீர் நீக்கம்

மும்பை : இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோத இருக்கும் டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக பும்ரா நீக்கப்பட்டுள்ளார்.

அவரது திடீர் நீக்கத்தால் ரசிகர்கள் கவலை அடைந்து இருக்கின்றனர். தென்னாப்பிரிக்க அணியை இந்தியா வீழ்த்துமா? பும்ரா இல்லாதது தென்னாப்பிரிக்க அணிக்கு சாதகமாக இருக்குமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

பும்ராவுக்கு பதிலாக மாற்று வீரர் ஒருவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடர்

தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடர்

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அக்டோபர் 2 முதல் துவங்க உள்ளது. முன்னதாக நடந்த டி20 தொடர் 1 - 1 என சமன் ஆனது.

டெஸ்ட் தொடர் முக்கியம்

டெஸ்ட் தொடர் முக்கியம்

இந்த நிலையில், டெஸ்ட் தொடரையாவது இந்தியா கைப்பற்ற வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்த டெஸ்ட் தொடர், டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு அங்கம் என்பதால் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டியது அவசியம்.

டெஸ்ட் தொடர் முக்கியம்

டெஸ்ட் தொடர் முக்கியம்

இந்த நிலையில் தான், இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்று இருந்த வேகப் பந்துவீச்சாளர் பும்ரா காயம் காரணமாக டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் இந்த தொடர் முழுவதும் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது.

பும்ராவுக்கு காயம்

பும்ராவுக்கு காயம்

இந்த் நிலையில் தான், இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்று இருந்த வேகப் பந்துவீச்சாளர் பும்ரா காயம் காரணமாக டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் இந்த தொடர் முழுவதும் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது.

என்ன காயம்?

என்ன காயம்?

சமீபத்தில் அவருக்கு எடுக்கப்பட்ட ஒரு பரிசோதனையில் சிறிய அளவில் முதுகில் எலும்பு முறிவு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில் இருந்து குணமாகும் வரை தேசிய கிரிக்கெட் அகாடமி மற்றும் பிசிசிஐ மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார் பும்ரா.

அணிக்கு பின்னடைவு

அணிக்கு பின்னடைவு

பும்ராவின் காயத்தால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் 2 போட்டிகளில் 13 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார் அவர். மேலும், வெறும் 12 டெஸ்ட் போட்டிகளில் 62 விக்கெட்கள் வீழ்த்தி உச்சகட்ட பார்மில் இருக்கிறார்.

ரசிகர்கள் கவலை

ரசிகர்கள் கவலை

அப்படி இருக்கும் சூழலில் பும்ரா அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்கா அணி டெஸ்ட் போட்டிகளை வெல்லக் கூடிய அணி தான். உலகக்கோப்பை தோல்வியில் இருந்து மீண்டு வர புதிய திட்டங்களையும் தீட்டி வருகிறது அந்த அணி.

மாற்று வீரர் யார்?

மாற்று வீரர் யார்?

பும்ரா நீக்கப்பட்ட நிலையில், அவருக்கு மாற்றாக உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் உமேஷ் யாதவ் உத்தேச அணியில் சேர்க்கப்பட்டாலும், போட்டிகளில் பங்கேற்கவில்லை. தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் உத்தேச அணியிலும் அவர் பெயர் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளார்.

மாற்றப்பட்ட இந்திய அணி

மாற்றப்பட்ட இந்திய அணி

தென்னாப்பிரிக்கா தொடருக்கான டெஸ்ட் அணியின் புதிய பட்டியல் - விராட் கோலி (கேப்டன்), மாயங்க் அகர்வால், ரோஹித் சர்மா, புஜாரா, அஜின்க்யா ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், விரிதிமான் சாஹா, அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஷுப்மன் கில்

Story first published: Wednesday, September 25, 2019, 18:51 [IST]
Other articles published on Sep 25, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+