For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஸ்பைடர் மேன் போல பறந்தது வீணாய் போனது.. பும்ராவின் அசத்தல் கேட்சுக்கு பயன் இல்லையே!

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டி-20 போட்டியில் சர்ச்சைக்குரிய சிக்ஸ் ஒன்று கொடுக்கப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar

Recommended Video

பும்ரா பாய்ந்து பிடித்தும் பயனில்லை- வீடியோ

ஜோஹன்ஸ்பெர்க்: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டி-20 போட்டியில் சர்ச்சைக்குரிய சிக்ஸ் ஒன்று கொடுக்கப்பட்டு இருக்கிறது. பும்ரா தடுத்த பந்து ஒன்றிற்கு கேட்ச் கொடுக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டி-20 போட்டி ஜோஹன்ஸ்பெர்க் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் இந்தியா தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடியது. ஷிகர் தவான் இரண்டு சிக்ஸர்களுடன் 72 ரன்கள் அடித்தார். இதனால் 20 ஓவரில் முடிவில் இந்தியா 5 விக்கெட்டுக்கு 203 ரன்கள் எடுத்தது.

தென்னாப்பிரிக்க அணி தொடக்கத்திலேயே அதிரடியாக ஆடியது. புவனேஷ்வர் குமார் அதிகபட்சமாக 5 விக்கெட் எடுத்தார். இதனால் 20 ஓவரில் முடிவில் தென்னாப்பிரிக்கா 9 விக்கெட்டுக்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்தியா வெற்றிபெற்று டி-20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

பும்ரா

இந்த போட்டியில் பாண்டியா பந்தில் டேவிட் மில்லர் சிக்ஸ் ஒன்று அடித்தார். அதை தடுக்க பும்ரா ஒரே அடியாகா குதித்தார். சிக்ஸ் செல்லும் முன் பந்தை தூக்கி வெளியே வீசினார். ஆனாலும் அந்த பந்தில் சிக்ஸ் கொடுக்கப்பட்டது.

காரணம் என்ன

அவர் பந்தை தொடுவதற்கு முன் பவுண்டரி கோட்டை தொட்டு இருப்பார். ஆனால் பந்தை தொட்ட பவுண்டரி லைனில் கால் இல்லை. ஆனாலும் புதிய விதியின்படி பந்தை தொடுவதற்கு முன்பும் பவுண்டரி லைனை தொடக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

கோபம்

இவர் ''கிரிக்கெட் விதிகள் வரவர லாஜிக் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இது எப்படி சிக்ஸ் ஆக முடியும். அவர் கால் தரையிலேயே இல்லை'' என்றுள்ளார்.

இதுவும் நல்லதுதான்

இவர் ''இதுவும் நல்லதுதான், இல்லைனா எல்லா வீரரும் உள்ள வந்துட்டு அப்பறம் பந்து குதிச்சு பிடிச்சு வெளியே தூக்கி போடுவாங்க.'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Story first published: Monday, February 19, 2018, 12:15 [IST]
Other articles published on Feb 19, 2018
English summary
Jasprit Bumrah's stunning catch becomes viral in social media.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X