Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ரா - சஞ்சனா திருமணம்... 20 பேர் மட்டும்தான்.செல்போன்களுக்கு தடை, அப்படி என்னதான் செய்யப்போறாங்க

டெல்லி: இந்திய அணி பந்துவீச்சாளர் பும்ரா - சஞ்சனா கணேஷ் ஆகியோரின் திருமணத்தில் கலந்துகொள்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பும்ரா திருமணம் செய்துகொள்ளவிருக்கும் பெண் யாரென்பது ரகசியமாக இருந்த நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொகுப்பாளினி சஞ்சனா கணேஷ் என தெரியவந்தது.

இவர்கள் திருமணம் கோவாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் திருமணத்தில் கலந்துகொள்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

திருமணம்

திருமணம்

இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டி மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இருந்து விலகினார். அவருக்கு திருமணம் நடைபெறவுள்ளதால் பும்ரா பிசிசிஐ-யிடம் விடுமுறை கேட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனினும் அவர் திருமணம் செய்துகொள்ள போகும் பெண் யார் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் வேகமாய் பரவியது.

மணப்பெண் யார்?

மணப்பெண் யார்?

முதலில் நடிகை அனுபமா பரமேஸ்வரனை அவர் மணமுடிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், அனுபாமாவின் தாயார் அந்த தகவலை மறுத்தார். பின்னர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொகுப்பாளர் சஞ்சனா கணேசனை பும்ரா மணக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. பும்ரா கிரிக்கெட்டிலிருந்து விடுப்பு எடுத்துள்ள நிலையில், சஞ்சனாவும் தற்போது விடுப்பில் உள்ளது இந்த தகவலை உறுதிப்படுத்தும்விதமாக உள்ளது.

கட்டுப்பாடு

கட்டுப்பாடு

பும்ரா - சஞ்சனா திருமணம் கோவாவில் வரும் 14, 15ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இருவீட்டார் சார்பிலும் மொத்தம் 20 பேர் மட்டுமே கோவாவிற்கு சென்றுள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான தொடர் நடைபெற்று கொண்டிருப்பதால் இந்திய அணி வீரர்கள் யாரும் திருமணத்தில் பங்கேற்கவில்லை. மேலும் திருமணத்தை மிகவும் ரகசியமாக நடத்த மணமக்கள் விரும்புவதால், திருமணத்திற்கு செல்லும் உறவினர்களுக்கு செல்போன் எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

 சஞ்சனா யார்?

சஞ்சனா யார்?

சஞ்சனா கணேசன், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக உள்ளார். இதற்கு முன்னர் ஐபிஎல் போட்டிகளையும், ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிய இவர் 2014-ம் ஆண்டு நடந்த மிஸ் - இந்தியா போட்டியில் இறுதி சுற்று வரை சென்றிருந்தார். மற்றும் பிரபல பொழுதுபோக்கு தொலைக்காட்சியான எம்-டிவியின் ரியாலிட்டி நிகழ்ச்சியான ஸ்பிலிட்ஸ் வில்லாவின் 7வது சீசனில் பங்கேற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, March 11, 2021, 16:07 [IST]
Other articles published on Mar 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+