Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேப்டன் பதவி பின்னால் அலையாதீங்க! பும்ராவுக்கு அறிவுரை வழங்கிய பாகிஸ்தான் வீரர்

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா தற்போது தன்னுடைய கடைசி அத்தியாயத்தில் இருக்கின்றார். இதன் மூலம் இந்திய அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்படும் சூழல் உருவாகி இருக்கிறது. ஏற்கனவே ரோகித் சர்மா டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அவர் ஓய்வு பெற்று விட்டால் அடுத்த கேப்டன் யார் என்று கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்திருந்த இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா ஆஸ்திரேலியா வீரர் பாட் கம்மின்ஸ், டெஸ்ட் அணியின் கேப்டனாக இருப்பது போல் இந்திய அணியிலும் பவுலர் கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

ind vs ban cricket india vs bangladesh

ஆனால் இதற்கு கம்பீர் ஒத்துவரவில்லை. ஏற்கனவே ஹர்திக் பாண்டியா டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில் பௌலர்கள் அடிக்கடி காயம் அடைவதாக கூறி சூரியகுமார் யாதவ் என்ற பேட்ஸ்மேனை கேப்டனாக நியமித்திருந்தார். இந்த நிலையில் முன்னாள் பாகிஸ்தான் வீரர் பாசித் அலி, பும்ரா கேப்டன் பதவி பின்னால் அலையக்கூடாது என்று அறிவுரை வழங்கி இருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர் பும்ராவின் பேச்சை நான் கேட்கும் போது கேப்டன் பதவி மீது பாபர் அசாம் போல் ஆசை வைத்திருக்கிறார் என தெரிகிறது. பும்ரா போன்ற பவுலர்கள் கேப்டன் பதவிக்கு பின்னால் அலையக்கூடாது. உலகத்தரம் வாய்ந்த பவுலராக பும்ரா விளங்குகிறார். அவருடைய கவனம் எல்லாம் பௌலிங் மீது மட்டும் தான் இருக்க வேண்டும்.

கபில்தேவ், இம்ரான் கான் போன்ற பவுலர்கள் கேப்டன் பதவியில் இருந்ததாகவும் சொல்கிறார். ஆனால் பும்ரா சொன்ன இரண்டு பேருமே ஆல்ரவுண்டர்கள் என்பதை அவர் மறந்து விடக்கூடாது. கபில்தேவும், இம்ரான் காணும் தலைசிறந்த ஆல் ரவுண்டராக இருந்ததால் தான் கேப்டன் பதவிகளும் அவர்கள் ஜொலித்தார்கள். கபில்தேவ், இம்ரான் கான் இருவருமே கேப்டனாக நியமிக்கப்பட்ட பின் அணிக்குள் வந்தவர்கள் கிடையாது.

சாதாரண பவுலராக வந்து ஆல் ரவுண்டராக மாறி அதன்பிறகு கேப்டனாக மாறினார்கள். ஒரு பவுலருக்கும் ஒரு ஆல்ரவுண்டருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது. பேட் கம்மின்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்தும் பும்ரா பேசி இருக்கிறார். பாட் கம்மின்ஸ் நல்ல கேப்டனாக இருக்கிறார் ஆனால் அவர்களெல்லாம் அதிவேகமாக தொடர்ந்து பந்து வீசு கூடிய வீரராகவும் இருக்கிறார்கள்.

அவர்களால் நல்ல பயிற்சியாளராகவும் இருக்க முடியும். பும்ராவுக்கு வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கின்றேன். சாம்பியன்ஸ் கோப்பைக்கு பிறகு இந்திய அணிக்கு புதிய கேப்டனாக கூட வரலாம் என்றும் பாசித் அலி கூறியிருந்தார்.

Story first published: Tuesday, August 20, 2024, 13:38 [IST]
Other articles published on Aug 20, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+