Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மொத்தமே 6 ஓவர்கள்தான்..4வது டெஸ்டில் இருந்து விலகும் பும்ரா..ஒன்றை மட்டும் கற்றுக்கொண்டதாக கருத்து

அகமதாபாத்: 3வது டெஸ்டில் சரிவர வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்ததில் பணிச்சுமையை கையாள தெரிந்துக்கொண்டதாக பும்ரா தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதில் ஸ்பின்னர்களே ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியதால் பிட்ச் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் ஆட்டத்தில் தனக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து பும்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

 3வது டெஸ்ட் போட்டி

3வது டெஸ்ட் போட்டி

பகலிரவு டெஸ்டில் வழக்கமாக வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாகவே பிட்ச் இருக்கும். ஆனால் இந்த போட்டியில் மொத்தம் எடுக்கப்பட்ட 30 விக்கெட்களில் 28 விக்கெட்களை ஸ்பின்னர்களே எடுத்தனர். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு குறைந்த அளவே ஓவர்கள் தரப்பட்டன. குறிப்பாக 2வது இன்னிங்சில் இரு அணியில் இருந்தும் ஒரு வேகப்பந்துவீச்சாளர்கள் கூட ஓவர் வீசவில்லை.

பும்ராவே இல்லை

பும்ராவே இல்லை

இப்போட்டியில் இந்திய அணி நட்சத்திர வீரர் பும்ரா வெறும் 6 ஓவர்களை மட்டுமே வீசினார். அதிலும் முதல் இன்னிங்சில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டது. அதற்கு மாறாக அஸ்வின், அக்‌ஷர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் ஆகிய ஸ்பின்னர்களையே கோலி பயன்படுத்தினார்.

பணிச்சுமை பாடம்

பணிச்சுமை பாடம்

போட்டிக்கு பிறகு பேசிய கோலி, பந்துவீச்சாளர்கள் கூறியதை பகிர்ந்துள்ளார். பும்ரா இப்போட்டியில் தான் பனிச்சுமையை எப்படி கையாள்வது என்பதை தெரிந்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார். அதே போல் இஷாந்த் சர்மா, இது என்னுடைய 100வது டெஸ்ட் போட்டி ஆனால் பந்துவீச முடியவில்லை என கூறியுள்ளார். வாஷிங்டன் சுந்தர் வெறும் 3 பந்துகளே வீசினார். அவருக்கு பேட்டிங்கிலும் வாய்ப்பில்லை ஆனால் அவர் மகிழ்ச்சி எனக்கூறினார்.

 பும்ரா விலகல்

பும்ரா விலகல்

4வது டெஸ்ட் போட்டியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு பும்ரா பிசிசிஐ-யிடம் கோரிக்கை வைத்திருந்தார். இதனையடுத்து அவர் 4வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. அவருக்கு பதிலாக முகமது சிராஜ் அல்லது உமேஷ் யாதவ் ஆகியோர் சேர்க்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, February 28, 2021, 15:49 [IST]
Other articles published on Feb 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+